search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lalitha"

    • ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் மூலம் நடன இயக்குனராக திரைத்துறையில் அறிமுகமானவர் ஷோபி மாஸ்டர்.
    • ஷோபி மாஸ்டர்-லலிதா ஷோபி மாஸ்டர் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.

    இந்திய திரையுலகல் நடன இயக்குனராக பிரபலமானவர் ஷோபி மாஸ்டர். 2004 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தின் மூலம் நடன இயக்குனராக திரைத்துறையில் அறிமுகமானார். திரைத்துறையில் பல முன்னணி நட்சத்திரங்களுடனும், பல பிரம்மாண்ட படங்களிலும் நடன இயக்குனராக பணியாற்றி புகழ் பெற்றார். ஷோபி மாஸ்டர்-லலிதா இருவரும் காதல் திருமணம் செய்துக் கொண்டனர். இருவரும் இணைந்து ஒரு நடன பள்ளியை நடத்தி வருகின்றனர். இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. லலிதா மாஸ்டர் மீண்டும் கர்ப்பமானார். சமீபத்தில் அவருக்கு கோலகலமாக வளைகாப்பு நடைபெற்றது.

    இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு தனியார் மருத்துவமனையில் லலிதா மாஸ்டர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது தாய் சேய் இருவரும் பூரண நலத்துடன் உள்ளனர் என்றும் அன்பும் பாரட்டுக்களும் தெரிவித்த ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஷோபி மாஸ்டர் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

    காளி ரங்கசாமி இயக்கத்தில் மாஸ்டர் தினேஷ் - மனிஷா யாதவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஒரு குப்பைக் கதை' படத்தின் விமர்சனம். #OruKuppaiKathai #Dinesh #ManishaYadav
    தான் கொலை ஒன்று செய்துவிட்டதாக போலீசில் சரணடைகிறார் மாஸ்டர் தினேஷ். கொலை பற்றி போலீசார் அவரிடம் விசாரிக்க நடந்தவகளை ஒவ்வொன்றாக யோசிக்க அவரது முந்தைய வாழ்க்கை ஆரம்பமாகிறது.

    அதில், மாநகராட்சியில் குப்பை அள்ளும் தொழிலாளியாக வேலை பார்க்கிறார் தினேஷ், சென்னையில் குப்பம் ஒன்றில் தனது அம்மாவுடன் வசித்து வருகிறார். இவருடன் குப்பை அள்ளும் தொழிலாளியாக யோகி பாபு வருகிறார். தினேஷுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது அம்மா பல இடங்களில் பெண் பார்த்தும் ஏதுவும் அமையவில்லை. எந்த ஒரு கெட்ட பழக்கமும் இன்றி பண்பானவனாக, நேர்மையானவனாக இருக்கும் அவருக்கு, செய்யும் தொழிலால் பெண் கொடுக்க மறுக்கின்றனர். 

    இந்த நிலையில், தனது நண்பர் ஒருவர் மூலம் மனிஷா யாதவ்வை பெண் பார்க்க செல்கின்றனர். மனிஷா வீட்டில் மாப்பிள்ளை ஒரு கம்பெனியில் கிளார்க்காக பணிபுரிவதாக பொய் சொல்லச் சொல்கின்றனர். ஆனால் பொய் சொல்ல மனமில்லாமல், மனிஷாவின் அப்பாவான ஜார்ஜிடம் தான் குப்பை அள்ளும் தொழிலாளி என்கிற உண்மையை தினேஷ் சொல்கிறார். ஜார்ஜக்கு அவரது நேர்மை பிடித்துப்போக தனது பெண்ணை அவருக்கே கொடுக்க சம்மதிக்கிறார். 



    மேலும் மனிஷாவிடம், தினேஷன் தொழில் குறித்து சொல்ல வேண்டாம் என்றும் ஜார்ஜ் கேட்டுக் கொள்கிறார். இதையடுத்து மாஸ்டர் தினேஷுக்கும், மனிஷாவுக்கும் திருமணம் நடக்கிறது. மனிஷா கர்ப்பமாகியிருக்கும் நிலையில், தினேஷ் குப்பை அள்ளும் தொழிலாளி என்பது தெரிந்து விடுகிறது. இதையடுத்து தினேஷை வெறுக்க ஆரம்பிக்கும் மனிஷா, குழந்தை பெற்றுக் கொள்ள பிறந்த வீட்டுக்கு செல்கிறாள். குழந்தை பிறந்த பிறகு, தன்னால் மீண்டும் அந்த குப்பத்திற்கு வர முடியாது என்று மனிஷா கூறிவிடுகிறாள். இதையடுத்து அடுக்குமாடிக் குடியிறுப்புக்கு குடிபெயர்கின்றனர். 

    அங்கு அவர்களது வீட்டிற்கு அருகில் இருக்கும் ஐ.டி. ஊழியர் ஒருவருக்கும், மனிஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, ஒருகட்டத்தில் மனிஷா அவருடன் ஓடிவிடுகிறார். இதனால் கடும் மனவேதனைக்கு உள்ளாகும் தினேஷ், மனிஷா அவள் இஷ்டப்படி விட்டுவிட்டு, தனது குழந்தையை மட்டும் தன்னிடம் அழைத்த வர முடிவு செய்து மனிஷாவை தேடிச் செல்கிறார். 



    கடைசியில், தினேஷ் தனது குழந்தையை தன்னுடன் அழைத்து வந்தாரா? தினேஷ் ஏன் போலீசில் சரணடைந்தார்? அங்கு கொலை செய்யப்பட்டது யார்? மனிஷா என்ன ஆனார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    முதல் படத்திலேயே முன்னணி கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பின் மூலம் கவர்கிறார் மாஸ்டர் தினேஷ். ஒரு குப்பை அள்ளும் தொழிலாளியாகவே வந்து மனதில் நிற்கிறார். மனிஷா யாதவ் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களில் நடித்து கவர்ந்திருந்தாலும், இந்த படத்தில் குடும்ப பெண்ணாக, குழந்தைக்கு அம்மாவாக அவரது கதபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். கிடைத்த வாய்ப்பை நல்ல பயன்படுத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். 

    யோகி பாபு காமெடியுடன் குணசித்திர கதாபாத்திரத்திலும் கலக்கியிருக்கிறார். ஜார்ஜ், அதிரா, கோவை பானு. செந்தில், லலிதா என சின்ன சின்ன கதாபாத்திரங்களும் வாய்ப்பை பயன்படுத்தி நடித்திருக்கின்றனர்.  



    குப்பை அள்ளுவதை விரும்பி செய்யும் ஒருவருக்கு, அந்த தொழிலால் ஏற்படும் அவமானங்கள், அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என அனைத்தையும் எதார்த்தமாக, உணர்ச்சிப்பூர்வமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் காளி ரங்கசாமி. 

    படத்தில் கதாபாத்திரத்தின் உயரம் குறைவாக இருந்தாலும், மனதால் அந்த கதாபாத்திரங்கள் உயர்ந்த காட்டியிருக்கிறார். நமது சமூகத்தில் ஒரு குடும்பத்தில் கள்ளத் தொடர்பால் ஏற்படும் பிளவு, அதனால் இருவரது வாழ்க்கையும் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறது  என்பதை காட்டியிருக்கிறார். தற்போதைய இளைஞர்கள் தான் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்றால், இளம் பெண்களும் பொழுதுபோக்குக்கு ஆசைப்பட்டு விபரீதத்தை பொறுட்படுத்தாமல் வீணாவது என பலவற்றை அலசியிருக்கிறார். 



    குப்பை அள்ளுபவன், உள்ளத்தால் சுத்தமாக இருக்கிறான். நாகரீகமாக இருப்பவர்கள், உள்ளத்தால் குப்பையாக இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாக காட்டியிருக்கிறார். படத்தின் திரைக்கதையும், வசனமும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ஒரு குப்பைக் கதை படம் மூலம் ஒரு நல்ல கதை கொடுத்த இயக்குநர் என்ற பெயரை பிடிப்பார். 

    ஜோஸ்வா ஸ்ரீதரின் பின்னணி இசை அலட்டல் இல்லாமல் சிறப்பாக வந்திருக்கிறது. பாடல்களும் கேட்கும் ரகம் தான். மகேஷ் முத்துச்சுவாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `ஒரு குப்பைக் கதை' தூய்மையானது. #OruKuppaiKathai #MasterDinesh #ManishaYadav

    ×