search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு எப்போது?
    X

    விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு எப்போது?

    `துப்பாக்கி', `கத்தி' படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 62 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
    `மெர்சல்' படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 

    விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. 

    விஜய் ஜோடியாக நடிக்கும் நாயகி, வில்லன் மற்றும் மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு இறுதியானவுடன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். 



    மெர்சல் படத்தை தொடர்ந்து இந்த படத்துக்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    Next Story
    ×