என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கலைஞர்கள் நடிக்கும் 5 ஜி
Byமாலை மலர்26 Oct 2017 4:41 PM GMT (Updated: 26 Oct 2017 4:42 PM GMT)
உலக மாற்றுத்திறன் கலைஞர்கள் சங்கத்தின் மூலமாக 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கலைஞர்கள் ‘5ஜி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.
பிலிம் இன்டஸ்டிரி டிப்ரன்லி ஏபில்டு ஆர்டிஸ்ட் வெல்பேர் அசோசியேஷன் (FIDAAWA) உலக மாற்றுத்திறன் கலைஞர்களுக்கான முதல் சினிமா சங்கம் இது. இந்த சங்கத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கலைஞர்கள் நடிக்கும் ‘5ஜி’ என்ற படத்தை (FIDAAWA ) அமைப்பின் சார்பில் தயாரிக்கிறார்கள்.
இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகள் அதிகம் உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் பிறந்த மாற்றுத்திறன் கலைஞர் கே.பி.ராஜபாலாஜி.எம்.ஏ இந்த திரைப்படத்தினை இயக்க உள்ளார். உலக மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து மனித நேயத்தை உருவாக்கவே இந்த திரைப்படம் உருவாக்கப்படுகிறது.
இந்த படத்தில் தமிழ் திரையுலக நடிகர்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் தங்களின் மனிதநேயத்தை வெளிபடுத்த இத்திரைப்படத்தில் பணியாற்ற உள்ளனர். இப்படம் பற்றிய முழு விபரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. உலக மாற்றுத்திறனாளிகளின் தினமான டிசம்பர் 3 அன்று இந்த திரைப்படம் துவங்க உள்ளது.

Next Story
×