என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பிக்பாஸ் வீட்டுக்குள் ராணா
Byமாலை மலர்8 Aug 2017 10:23 AM GMT (Updated: 8 Aug 2017 10:23 AM GMT)
இந்தியில் பிரபலான பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில் தற்போது தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் பிக்பாஸில் நாளுக்கு நாள் புதுப்புது விஷயங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று ராணா இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கான வீடு பூனே அருகே லோனா வாலா என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் தினத்தன்று இந்த வீட்டுக்குள் ராணா சென்றார். அவரது திடீர் வருகை போட்டியாளர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
ராணா நடித்துள்ள ‘நேனே ராஜூ நேனே மந்திரி’ படத்தை பிரபலப்படுத்துவதற்காக ராணா இந்த வீட்டுக்கு சென்றார். அப்போது அந்த படத்தில் வருவது போன்றே வேட்டி அணிந்து சென்றார். அங்குள்ளவர்களுடன் உரையாடிய அவர், நண்பர்கள் தினத்தை அவர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
பின்னர் பிக்பாஸ் வீட்டை சுற்றிபார்த்த ராணா, நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜுனியர் என்.டி.ஆர். சிறப்பாக நிகழ்ச்சியை தொகுப்பதாக கூறி பாராட்டினார். அன்றைய தினம் வீட்டை விட்டு வெளியேறியவரின் பெயரையும் அறிவித்தார்.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி போன்று தெலுங்கு நிகழ்ச்சியிலும் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக ராணா தெலுங்கு பிக்பாஸ் வீட்டில் ஒரு சில மணிநேரம் இருக்க ஏற்பாடு செய்து இருந்தனர்.
இது போல் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தமிழ்பட உலகின் முன்னணி நடிகர் அல்லது நடிகையை ஒருசில நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ராணா நேனே ராஜூ நேனே மந்திரி ஜூனியர் என்.டி.ஆர். தெலுங்கு பிக்பாஸ் பிக்பாஸ் கமலஹாசன் விஜய் டிவி நமிதா ஓவியா காயத்ரி ரகுராம் ஜூலி ஆர்த்தி ரைசா கஞ்சாகருப்பு வையாபுரி சக்தி ஆரூள் பரணி சினேகன் கணேஷ் Vijay TV Namitha Oviya Gayatri Raghuram Julie Aarthi Raiza Kancha karuppu Vyapuri Shakti Aarul Bharani Snehan Ganesh venkatram biggbsoss rana Telugu Biggboss Nene raju nene Mantri Kajal Aggarwal Teja
Next Story
×