என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
விஜய் ஆண்டனியுடன் இணைந்த சுனைனா
Byமாலை மலர்22 July 2017 6:08 AM GMT (Updated: 22 July 2017 6:08 AM GMT)
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
`எமன்' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி தற்போது சீனு வாசன் என்ற புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் `அண்ணாதுரை' படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் `காளி' படத்தில் நடிக்க விஜய் ஆண்டனி ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இப்படத்தை விஜய் ஆண்டனி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப் மூலம் தயாரிக்க உள்ளார். இந்நிலையில் `காளி' படத்தில் நடிக்கவுள்ள மூன்று நாயகிகளில், ஒரு நாயகியாக நடிகை சுனைனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதனை டுவிட்டர் மூலம் அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த படத்தில் தனக்கு முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், `காதலில் விழுந்தேன்' படத்திற்கு இசையமைத்த விஜய் ஆண்டனியுடன் ஜோடி சேருவதில் மகிழ்ச்சி என்றும் சுனைனா தெரிவித்துள்ளார்.

Next Story
×