search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்
    X

    பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்

    `ஏஏஏ' போஸ்டர் குறித்து லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்த கருத்தை அடுத்து சிம்பு அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவுக்கு லக்‌ஷ்மி அழைப்பு விடுத்திருக்கிறார்.
    சிம்பு நடித்துள்ள `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் ரம்ஜான் வெளியீடாக வருகிற ஜுன் 26-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கான புரமோஷன் வேலைகளில் படக்குழு தற்போது ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அவ்வப்போது சில போஸ்டர்களையும் படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் சிம்பு மற்றும் தமன்னா நிற்பது போன்ற போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டர் குறித்து, இயக்குநரும், நடிகையுமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.



    அதாவது, `ஏஏஏ' போஸ்டரில் ஆண் (சிம்பு) தனது உடலை முழுவதுமாக மறைத்திருக்கிறார், ஆனால் பெண் (தமன்னா) அரைகுறை ஆடையுடன் உடலை காட்டிக் கொண்டு நிற்க்கிறாரே? என்ற ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் இதுகுறித்த வார்த்தைப் போரும் நடந்தது. இந்நிலையில் அவரது கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக நடிகர் சிம்பு, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.

    அதனை லக்‌ஷ்மி, அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, சிம்பு என்னை தொடர்பு கொண்டு பேசினார். இதில் இருவரும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டோம். முக்கியமாக பெண்களுக்கு எதிராக, பெண்களை அவமதிக்கும் விதமாக நடக்கும் போருக்கு எதிராக சிம்பு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டதாக லக்‌ஷ்மி குறிப்பிட்டிருந்தார்.
    Next Story
    ×