search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் அறிமுகம்: ஹீரோ அதிரடி
    X

    புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் அறிமுகம்: ஹீரோ அதிரடி

    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் மூன்று வாகனங்களை 2018 ஆட்டோ எக்ஸ்போ விழா துவங்கும் முன்பே அறிமுகம் செய்திருக்கிறது.
    புதுடெல்லி:
     
    இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூரோ எலெக்ட்ரிக் மூன்று வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    ப்ரோடோடைப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மிதிவண்டிகளை ஹீரோ எலெக்ட்ரிக் அறிமுகம் செய்துள்ளது. இவை முறையே AXL HE-20, A2B ஸ்பீடு மற்றும் கியோ பூஸ்ட் என அழைக்கப்படுகின்றன. புதிய வாகனங்களை 2018-ம் ஆண்டில் படிப்படியாக வெளியிட ஹீரோ திட்டமிட்டிருக்கிறது.  

    எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரிப்பதில் பத்து ஆண்டுகளை கடந்திருப்பதை அந்நிறுவனம் ‘10 Years Ahead' என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் ஹீரோ எலெக்ட்ரிக் இந்தியாவில் 15 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்து இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரிவில் 65% பங்குகளை பெற்றிருக்கிறது.

    ஹீரோ AXL HE-20 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 4000 வாட் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டு இயங்குகிறது. இந்த இன்ஜின் 6000 வாட் திறன் கொண்டிருக்கிறது. புதிய ஸ்கூட்டர் மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்திலும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. லித்தியம் அயன் பேட்டரி கொண்டிருப்பதால் முழுமையாய் சார்ஜ் செய்ய நான்கு மணி நேரம் ஆகிறது.



    புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பேட்டரியை சார்ஜ் செய்யும் வகையிலும், செயல்திறனை மேம்படுத்தும் வகையில் பிரேக்கிங் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஹீரோ AXL HE-20 மாடலில் கீலெஸ் எண்ட்ரி, ஜி.பி.எஸ். டிராக்கிங் போன்ற பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. கிளவுட் மூலம் இணைக்கப்பட்டிருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு சரிவீஸ் குறித்த விவரங்களை தெரிவிக்கும்.

    எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமின்றி ஹீரோ எலெக்ட்ரிக் இரண்டு எலெக்ட்ரிக் மிதிவண்டிகளையும் அறிமுகம் செய்துள்ளது. A2B ஸ்பீடு சைக்கிளில் 500-வாட் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 36 வோல்ட் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த பேட்டரி 700 முறை முழைமையாக சார்ஜ் செய்யவும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 70 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. புதிய A2B ஸ்பீடு மிதிவண்டி மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. 

    ஹீரோ A2B கியோ பூஸ்ட் 350-வாட் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டுள்ளது. மணிக்கு அதிகபட்சம் 32 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும் இந்த மோட்டார் லித்தியம் அயன் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்லும். மேலும் இந்த மிதிவண்டி மடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
    Next Story
    ×