search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹீரோ எலெக்ட்ரிக்"

    • ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் நைடெக் மோட்டார்கள் வழங்கப்படுகின்றன.
    • இதுதவிர புதிதாக உற்பத்தி ஆலையை ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    இந்திய சந்தையில் பழமையான மற்றும் மிகப் பெரும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராக ஹீரோ எலெக்ட்ரிக் விளங்குகிறது. 2022 ஆண்டில் மட்டும் விற்பனையில் ஒரு லட்சத்திற்கும் அதிக யூனிட்களை கடந்து அசத்தியுள்ளது. நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருவது வினியோக பிரிவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் ஹீரோ எலெக்ட்ரிக் விற்பனை வளர்ச்சி பெற்று இருக்கிறது.

    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில்- ஃபோடான் LP, ஆப்டிமா CX, NYX HS500ER மாடல்களை ஹை-ஸ்பீடு பிரிவிலும், லோ-ஸ்பீடு பிரிவில் NYX E5, அட்ரியா LX மற்றும் எடி என மொத்தத்தில் ஏழு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்திய சந்தையில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு 6 லட்சத்திற்கும் அதிக வாடிக்கையளர்கள் உள்ளனர் என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    அடுத்த மூன்று ஆண்டுகளில் 5 மில்லியன் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து இருப்பதாக ஹீரோ எலெக்ட்ரிக் தெரிவித்துள்ளது. இதற்காக உற்பத்தி திறன், டீலர்ஷிப் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, பயிற்சி அளிப்பது போன்ற பிரிவுகளில் முதலீடு செய்ய இருக்கிறது. இத்துடன் 25 ஆயிரம் மெக்கானிக்-களுக்கு பயிற்சி இளிக்கவும் ஹீரோ எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது.

    எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சார்ஜிங் மையங்கள் பிரிவில் கவனம் செலுத்தும் வகையில், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 20 ஆயிரம் சார்ஜிங் நெட்வொர்க்குகளை இன்ஸ்டால் செய்ய இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் ஜப்பானை சேர்ந்த நைடெக் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. நைடெக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மோட்டார்கள் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவன அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது.

    மத்திய அரசின் PLI திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டு இருக்கும் 75 நிறுவனங்களில் ஒன்றாக நைடெக் இருக்கிறது. உற்பத்தியை பொருத்தவரை ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் ஆண்டுக்கு ஒரு லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட லூதியானா ஆலை திறனை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆலை 2012 வாக்கில் அமைக்கப்பட்டது. ஜூலை 2022 வாக்கில் ஆப்டிமா மற்றும் NYX எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிதம்பூர் மஹிந்திரா நிறுவன ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

    இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் அரசுடன் இணைந்து மாபெரும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஹீரோ எலெக்ட்ரிக் கையெழுத்திட்டது. இந்த ஆலையில் ஆண்டுக்கு இரண்டு மில்லியன் யூனிட்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கும். இந்த ஆலை சலர்பூர் பகுதியில் சுமார் 170 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த ஆலையில் உற்பத்தி துவங்க இருக்கிறது.

    ×