search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    விரைவில் வெளியாகும் ஹூன்டாய் க்ரெட்டா
    X

    விரைவில் வெளியாகும் ஹூன்டாய் க்ரெட்டா

    ஹூன்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் எதிர்பார்த்ததை விட முன்னதாகவே வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஹூன்டாய் இந்தியா நிறுவனத்தின் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் மே மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஹூன்டா க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆகஸ்டு மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது.

    புதிய க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் பேஸ் மாடல் விலை தற்சமயம் விற்பனையாகும் மாடலை போன்றே நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் டாப் எண்ட் மாடலின் விலை ரூ.80,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹூன்டா க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் தற்போதைய மாடலை விட மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய மாடலின் தோற்றத்தில் மாற்ற செய்யப்படிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய காரின் முன்பக்கம் புதிய கிரில் வடிவமைப்பு, புதிய பம்ப்பர்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஹெட்லேம்ப் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஃபாக் லேம்ப், பம்ப்பரில் எல்இடி டி.ஆர்.எல். வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.



    ஃபேஸ்லிஃப்ட் க்ரெட்டா மாடலில் டூயல் டோன் அலாய் வீல், கண்ணாடியின் கீழ் க்ரோம் பெல்ட் வழங்கப்படுகிறது. பின்புறம் மேம்படுத்தப்பட்ட டெயில் லைட், அப்டேட் செய்யப்பட்ட பம்ப்பர், உள்புறம் மேம்படுத்தப்பட்ட தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    தற்போதைய மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் A1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 123 பி.ஹெச்.பி. பவர், 151 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர் மற்றொரு 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் 126 பி.ஹெச்.பி. பவர் வழங்கப்படுகிறது. இவை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    ஹூன்டாய் க்ரெட்டா மாடல் இந்தியாவில் ஜீப் காம்பஸ், ரெனால்ட் கேப்டூர், டாடா ஹெக்சா மற்றும் மஹேந்திரா எக்ஸ்.யு.வி.500 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.
    Next Story
    ×