search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hyundai Creta Facelift"

    ஹூன்டாய் இந்தியா கடந்த மாதம் அறிமுகம் செய்த கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் இந்திய முன்பதிவுகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் ஹூன்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 2015-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா இதுவரை விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. சர்வதேச சந்தையில் இதுவரை சுமார் நான்கு லட்சத்தக்கும் அதிக வாடிக்கையாளர்களை கிரெட்டா பெற்றிருக்கிறது.

    அதீத வரவேற்பை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்கள கொண்டிருக்கிறது. புதிய கிரெட்டா காரில் முன்பக்கம் பெரிய கேஸ்கேட் கிரில், முன்பக்க பம்ப்பரில் ஃபாக் லேம்ப் சேர்க்கப்பட்டுள்ளது. பின்புற பம்ப்பர்கள் மற்றும் டெயில்லேம்ப்களில் புதிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வெளிப்புறத்தில் டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டு  பின்புறம் முற்றிலும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது.
     
    இதுவரை சுமார் 70,000-க்கும் அதிகமானோர் விசாரித்துள்ள நிலையில், 14,366-க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக ஹூன்டாய் தெரிவித்துள்ளது.


    உள்புறத்தின் ஹூன்டாய் கிரெட்டா 2018 மாடலில் அதிக மாற்றங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில், டாப் என்ட் மாடலில் மட்டும் சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. பேஸ் இ வேரியன்ட் மாடலில் ஓட்டுனர் இருக்கை உயரத்தை மாற்றும் வசதி வழங்கப்படுகிறது. டாப்-என்ட் SX (O) மாடலில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், ஓட்டுனர் இருக்கையை ஆறு விதங்களில் மாற்றும் வசதி, ஸ்மார்ட் கீ பேன்ட், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆறு ஏர்-பேக் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஹூன்டாய் கிரெட்டா 2018 பேஸ் வேரியன்ட் விலை ரூ.9.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) துவங்கி டாப் என்ட் வேரியன்ட் விலை ரூ.15.03 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கிரெட்டா 2018 வைட், ஆரஞ்சு, பிளாக், சில்வர் புளு, ரெட், வைட்/பிளாக் (டூயல்-டோன் ) மற்றும் ஆரஞ்சு/பிளாக் (டூயல்-டோன்) என மொத்தம் ஏழு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கிறது.
    ஹூன்டாய் இந்தியா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட கிரெட்டா எஸ்யுவி வெளியீட்டு தேதி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஹூன்டாய் இந்தியா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட கிரெட்டா எஸ்யுவி மாடல் மே 21-ம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட கிரெட்டா புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியான நிலையில், இந்த எஸ்யுவி விற்பனையாளர்களிடம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் 2018 ஹூன்டாய் கிரெட்டா விலை மே 21-ம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. 

    ஏற்கனவே புதிய கிரெட்டா மாடலுக்கான முன்பதிவுகளை விற்பனையாளர்கள் துவங்கிவிட்ட நிலையில், இதன் விநியோகம் இம்மாத இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட ஹூன்டாய் கிரெட்டா மாடலில் காஸ்மெடிக் அப்டேட்கள் மட்டும் செய்யப்பட்டு மெக்கானிக்கல் அம்சங்கள் முந்தைய மாடலை போன்றே வழங்கப்படும் என கூறப்படுகிறது.


    புகைப்படம்: நன்றி RushLane

    புதிய கிரெட்டா காரில் முன்பக்கம் க்ரோம் ட்ரிம் செய்யப்பட்ட ஹெக்சாகோனல் கிரில், முன்பக்க பம்ப்பரில் ஃபாக் லேம்ப் சேர்க்கப்பட்டுள்ளது. பின்புற பம்ப்பர்கள் மற்றும் டெயில்லேம்ப்களில் புதிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் தற்போதைய வடிவமைப்புக்கு மாற்றாக வழங்கப்படுகின்றன. 

    புதிய தலைமுறை ஹூன்டாய் எலைட் i20 மாடலில் வழங்கப்பட்டதை போன்ற மென்மையான, கிரே-தீம் செய்யப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டா இன்ஜின் அம்சங்களில் 1.4 லிட்டர் டீசல் (90PS, 220 Nm), 1.6 லிட்டர் டீசல் (128PS, 220Nm) மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் (123PS, 151Nm) வழங்கப்பட்டுள்ளது. 

    இந்த இன்ஜின்கள் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்களை கொண்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் ஹூன்டாய் கிரெட்டா விற்பனை சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், புதிய அப்டேட் மூலம் ஹூன்டாய் இந்த நிலையை தக்க வைக்க திட்டமிட்டுள்ளது. 

    இந்தியாவில் ஹூன்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஜீப் காம்பஸ், ரெனால்ட் கேப்டூர், டாடா ஹெக்சா மற்றும் மஹேந்திரா எக்ஸ்யுவி500 உள்ளிட்ட மாடல்களுடன் அடுத்த சில ஆண்டுகளில் வெளியாக இருக்கும் சில மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
    ×