search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2019 டாமினர் 400 விலை வெளியானது
    X

    2019 டாமினர் 400 விலை வெளியானது

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2019 டாமினர் 400 மோட்டார்சைக்கிள் இந்திய விலை விவரங்கள் வெளியாகியுள்ளது. #Dominar400



    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மேம்பட்ட 2019 டாமினர் 400 மோட்டார்சைக்கிள் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில், தற்சமயம் இதன் விலை வெளியாகியுள்ளது. 

    அதன்படி 2019 டாமினர் 400 விலை ரூ.1.73 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன் ஆன்-ரோடு விலை ரூ.2.22 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது. புதிய மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு பிப்ரவரி மாதத்தில் துவங்கியுள்ளது.

    விரைவில் அறிமுகமாக இருக்கும் டாமினர் மோட்டார்சைக்கிள் பஜாஜ் தனது புதிய விளம்பர படம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி புதிய மோட்டார்சைக்கிளின் முன்புறம் புதிதாக காட்சியளிக்கிறது. 



    ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக 2019 டாமினர் மோட்டார்சைக்கிளின் முன்புறம் அப்சைடு-டவுன் (USD) ஃபோர்க்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை பார்க்க கே.டி.எம். 390 டியூக் போன்று காட்சியளிக்கின்றன.

    மற்றபடி புதிய மோட்டார்சைக்கிளில் ட்வின்-போர்ட் எக்சாஸ்ட் கேனிஸ்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் புதிய டாமினரில் அலாய் வீல்கள் மாற்றப்பட்டு, சிங்கிள் டோன் நிறம் பூசப்பட்டுள்ளன. தற்போதைய மாடலில் டூயல்-டோன் நிறம் பூசப்பட்டிருக்கின்றன. 

    தற்போதைய டாமினர் மோட்டார்சைக்கிளில் 373.5சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 35 பி.எஸ். பவர், 35 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய என்ஜின் 39 பி.எஸ். பவர் மற்றும் 650 ஆர்.பி.எம். வழங்கும் படி டியூன் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புகைப்படம் நன்றி: Motoroids
    Next Story
    ×