என் மலர்

  நீங்கள் தேடியது "Bajaj Dominar 400"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது டாமினர் சீரிஸ் மாடல்களின் விலையை மாற்றி உள்ளது.
  • புதிய விலை ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது.

  பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டாமினர் 400 மற்றும் டாமினர் 250 மோட்டார்சைக்கிள்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. இரு மாடல்களின் விலையும் முறையே ரூ. 6 ஆயிரத்து 400 மற்றும் ரூ. 3 ஆயிரத்து 152 என உயர்த்தப்பட்டுள்ளது.

  விலை உயர்வை தொடர்ந்து டாமினர் 400 விலை ரூ. 2 லட்சத்து 23 ஆயிரத்து 538 என்றும் டாமினர் 250 விலை ரூ. 1 லட்சத்து 75 ஆயிரத்து 002 என்றும் மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


  டாமினர் 250 மாடல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அப்டேட் செய்யப்பட்டு புதிதாக மூன்று வித டூயல் டோன் ஆப்ஷன்களில் வழங்கப்பட்டது. புதிய நிறம் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் 248.77சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 26.6 ஹெச்.பி. பவர், 23.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

  டாமினர் 400 மாடலில் 373.3சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 39.42 ஹெச்.பி. பவர், 35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அப்டேட் செய்யப்பட்டு புதிதாக ஃபேக்டரி-ஃபிட் செய்யப்பட்ட டூரிங் அக்சஸரீக்கள் வழங்கப்பட்டன. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் விலை அதிரடியாக மாற்றப்பட்டு இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.  இந்தியாவில் பஜாஜ் டாமினர் 400 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் நான்காவது முறையாக பஜாஜ் டாமினர் 400 விலை அதிகரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மே மாதத்தில் டாமினர் 400 விலை அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  புதிய விலை மாற்றத்தின் மூலம் பஜாஜ் டாமினர் 400 ஏ.பி.எஸ். இல்லாத மாடலின் விலை ரூ.1.48 லட்சம் மற்றும் ஏ.பி.எஸ். வசதி கொண்ட மாடலின் விலை ரூ.1.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்,, டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

  பஜாஜ் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் 2016 டிசம்பரில் ரூ.1.36 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை டாமினர் 400 விலை ரூ.12,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.  ஜனவரி 2018-இல் பஜாஜ் டாமினர் 2018 எடிஷன் புதிய நிறம் மற்றும் தங்க நிறத்தாலான அலாய் வீல்களுடன் வெளியிடப்பட்டது. எனினும் மோட்டார்சைக்கிளின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

  பஜாஜ் டாமினர் 400 மாடலில் 373சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்டெட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 35 பி.ஹெச்.பி. பவர், 35 என்.எம். டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. டாமினர் 400 மாடலில் ஃபுல் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிஸ்க் பிரேக், ஸ்லிப்பர் கிளட்ச், டூயல் சேனல்-ஏ.பி.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

  டாமினர் 400 விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் இந்திய சந்தையில் மாதம் 1000 யூனிட்களை தற்சமயம் விற்பனை செய்யும் பஜாஜ், விரவைில் 10,000 யூனிட்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. வெளிநாடுகளில் பஜாஜ் டாமினர் 400 நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் இந்திய விலை மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
  புதுடெல்லி:

  பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய டாமினர் ஆன்டி-லாக் பிரேக்கிங் (ABS) வசதி கொண்ட மாடலின் விலை ரூ.2000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய டாமினர் விலை ரூ.1.6 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  பஜாஜ் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டு இருக்கும் புதிய விலை ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் இல்லாத மாடலின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ.1.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டாமினர் 400 ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் இல்லாத மாடலின் விற்பனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

  2018 பஜாஜ் டாமினர் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. முந்தைய மாடலை விட அதிகளவு மாற்றங்களுடன் புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. 2018 டாமினர் மாடலில் புதிய நிறம் மற்றும் தங்க நிற அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே டாமினர் 400 மோட்டார்சைக்கிள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக விலை அதிகரிக்கப்பட்டுள்லது.   பஜாஜ் டாமினர் 400 மாடலில் 373சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்டெட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 35 பி.ஹெச்.பி. பவர், 35 என்.எம். டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. டாமினர் 400 மாடலில் ஃபுல் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிஸ்க் பிரேக், ஸ்லிப்பர் கிளட்ச், டூயல் சேனல்-ஏ.பி.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

  முன்னதாக பஜாஜ் சிடி100 விலை குறைக்கப்பட்டு, இந்த மாடல் இந்தியாவின் விலை குறைந்த மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்றது. அந்த வகையில் பஜாஜ் சிடி100 பேஸ் வேரியண்ட் விலை ரூ.30,714 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்ட

  பஜாஜ் டாமினர் 400 புதிய விலை ஏற்கனவே அந்நிறுவன வலைத்தளத்தில் அப்டேட் செய்ய்ப்பட்டு விட்டது. எனினும் புதிய விலையேற்றத்துக்கான காரணம் அறியப்படவில்லை. மார்ச் 2018-இல் மட்டும் பஜாஜ் நிறுவனம் 1561 டாமினர் யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
  ×