search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹோன்டா மோட்டார்சைக்கிள் விற்பனையில் வளர்ச்சி
    X

    ஹோன்டா மோட்டார்சைக்கிள் விற்பனையில் வளர்ச்சி

    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா 2018-19 நிதியாண்டு விற்பனையில் 15% வளர்ச்சி பெற்றிருக்கிறது.
    புதுடெல்லி:

    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2018-19 நிதியாண்டில் அதிகபட்ச மாதாந்திர விற்பனையை பதிவு செய்திருக்கிறது. கடந்த மாதம் மட்டும் ஹோன்டா நிறுவனம் 6 லட்சம் (6,35,811) யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது, மார்ச் மாதத்தில் மட்டும் இந்நிறுவனம் 5,51,732 யூனிட்களை விற்பனை செய்கிருந்தது.

    ஒரே மாதத்தில் 4 லட்சத்துக்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். ஏப்ரல் 2017-இல் 3,68,550 யூனிட்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஐந்து லட்சத்துக்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்திருக்கிறோம், இது ஹன்டா வரலாற்றில் முதல் முறையாகும், இதே போன்று ஆறு லட்சம் யூனிட்களை கடந்திருக்கிறோம். 



    ஒரே மாதத்தில் 4 லட்சம் ஸ்கூட்டர்கள் மற்றும் 2 லட்சம் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்திருக்கிறோம் என ஹோன்டா ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் இந்தியா விற்பனை மற்றும் விளம்பர பிரிவு மூத்த துணை தலைவர் யத்வீந்தர் சிங் குலேரியா தெரிவித்துள்ளார்.

    உள்நாட்டு மோட்டார்சைக்கிள் விற்பனையில் ஹோன்டா நிறுவனம் 2,12,284 யூனிட்களை கடந்த மாதம் விற்பனை செய்து சுமார் 16% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. ஏற்றுமதியிலும் கடந்த மாத நிலவரப்படி ஹோன்டா சிறப்பான விற்பனையை பதிவு செய்திருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஹோன்டா நிறுவனம் 46,077 யூனிட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. ஏப்ரல் 2017-இல் ஹோன்டா நிறுவனம் 27,045 யூனிட்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    2018-19 நிதியாண்டு ஹோன்டாவிற்கு உற்சாகமாக அமைந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு வளர்ச்சி பணிகளுக்கென ரூ.800 கோடி முதலீடு செய்ய ஹோன்டா திட்டமிட்டுள்ளது. இதே ஆண்டில் மட்டும் 18 மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்ய ஹோன்டா திட்டமிட்டுள்ளது.
    Next Story
    ×