search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    தீவிர சோதனையில் டாடா அல்ட்ரோஸ் வெளியான புதிய புகைப்படம்
    X

    தீவிர சோதனையில் டாடா அல்ட்ரோஸ் வெளியான புதிய புகைப்படம்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. #TataMotors



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் கார் மாடலான அல்ட்ரோஸ்-ஐ அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டு முன் இந்த கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இவை மனாலியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    டாடா அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் கார் முதன்முதலில் 2019 ஜெனிவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டாடா அல்ட்ரோஸ் கார் அந்நிறுவனத்தின் ஆல்ஃபா தளத்தில் உருவான முதல் கார் ஆகும். இதுதவிர டாடாவின் எதிர்கால கார் மாடல்களும் ஆல்ஃபா தளத்திலேயே உருவாக இருக்கிறது.

    டாடாவின் பெரிய கார்கள் ஒமேகா தளத்தில் உருவாக்கப்படுகின்றன. இது முதன்முதலில் ஹேரியர் எஸ்.யு.வி. மாடலில் அறிமுகம் செய்யப்பட்டது. டாடா அல்ட்ரோஸ் கார் இமேபேக்ட் 2.0 வடிவமைப்பில் அறிமுகமாகும் டாடாவின் இரண்டாவது கார் ஆகும். முன்னதாக இதேபோன்ற வடிவமைப்பு ஹேரியர் எஸ்.யு.வி. மாடலில் பயன்படுத்தப்பட்டிருந்தது.



    புதிய காரில் ஏ.பி.எஸ்., இ.பி.டி., ஏர்பேக், சீட்-பெல்ட் ரிமைண்டர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்படுகின்றன. புதிய ஹேட்ச்பேக் கார் 2019 அக்டோபரில் அமலாக இருக்கும் புதிய பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்படுகிறது. 

    டாடா அல்ட்ரோஸ் கார் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் என மூன்றுவித ஆப்ஷன்களில் அறிமுகமாகும் என தெரிகிறது. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இரண்டு 1.5 லிட்டர் என்ஜின்களும் நெக்சன் மாடலில் இருந்தும் 1.2 லிட்டர் யூனிட் டியாகோ மாடலில் இருந்து பயன்படுத்தப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: Rushlane
    Next Story
    ×