search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஏர்டெல் லோகோ
    X
    ஏர்டெல் லோகோ

    ரூ. 97 விலையில் 2 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல்

    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 97 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.



    பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ. 97 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை தனது பயனர்களுக்கு அறிவித்துள்ளது. இச்சலுகையில் பயனர்களுக்கு 2 ஜி.பி. டேட்டா 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.

    தற்சமயம் புதிய சலுகை தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஏர்டெல் ரூ. 97 காம்போ ரீசார்ஜ் சலுகையை அறிவித்தது. இதில் பயனர்களுக்கு 1.5 ஜி.பி. டேட்டா மற்றும் 350 நிமிடங்களுக்கு வாய்ஸ் காலிங் சேவை வழங்கப்பட்டது. எனினும், அறிவிக்கப்பட்ட சில மாதங்களில் இச்சலுகை நீக்கப்பட்டு விட்டது.

    மொபைல் பயன்பாடு - கோப்புப்படம்

    முதற்கட்டமாக ஏர்டெல் ரூ. 97 சலுகை ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது. இச்சலுகையின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். புதிய சலுகையை ஏர்டெல் ஸ்பெஷல் ரீசார்ஜ் எஸ்.டி.வி. காம்போ பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளது.

    முன்னதாக ஏர்டெல் நிறுவனம் ரூ. 148 விலையில் பிரீபெயிட் சலுகை ஒன்றை அறிவித்தது. இதில் பயனர்களுக்கு 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
    Next Story
    ×