search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இணையத்தில் லீக் ஆன ஏ.ஐ. டூயல் கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன்
    X

    இணையத்தில் லீக் ஆன ஏ.ஐ. டூயல் கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன்

    ஹூவாய் நிறுவனத்தின் வை சீரிஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Huawei #Smartphones



    ஹூவாய் நிறுவனத்தின் வை7 2019 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஹூவாய் என்ஜாய் 9 ஸ்மார்ட்போனின் சர்வதேச எடிஷன் ஆகும்.

    ஹூவாய் என்ஜாய் 9 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஏ.ஐ. சீன் டிடெக்ஷன், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, போர்டிரெயிட் மோட், 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



    ஹூவாய் வை7 2019 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 14 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், அரோரா புளு, கோரல் ரெட் மற்றும் அரோரா வைலட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
    Next Story
    ×