search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    180 நாட்களுக்கு அன்லிமிட்டெட் சேவை வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை
    X

    180 நாட்களுக்கு அன்லிமிட்டெட் சேவை வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை

    ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் சேவை வழங்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள புதிய சலுகையின் விலை ரூ.995 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூ.995 சலுகையில் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 1 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. 180 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    இத்துடன் ஏர்டெல் டூ ஏர்டெல் எண்களுக்கு மேற்கொள்ளப்படும் ஆன்-நெட் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. தினசரி எஸ்.எம்.எஸ். அளவு கடந்ததும் உள்ளூர் எஸ்.எம்.எஸ். ஒன்றிற்கு ரூ.1 மற்றும் தேசிய எஸ்.எம்.எஸ். ஒன்றிற்கு ரூ.1.5 வரை வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    இதேபோன்று டேட்டா அளவு கடந்ததும் டேட்டா கட்டணம் 10கே.பி.-க்கு 4 பைசா வரை வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த சலுகையில் அழைப்புகளில் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. முதற்கட்டமாக புதிய ஏர்டெல் சலுகை தமிழ் நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் டெல்லி உள்ளிட்ட வட்டாரங்களில் வழங்கப்படுகிறது.

    ஏர்டெல் ரூ.995 சலுகை ஜியோ ரூ.999 மற்றும் ரூ.1,999 சலுகைகளுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. ஜியோவின் ரூ.999 சலுகையில் அன்லிமிட்டெட் அழைப்புகள், 60 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஜியோ வழங்கும் ரூ.999 சலுகையில் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. மேலும் ஜியோ சலுகையில் வழங்கப்படும் வாய்ஸ் கால்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    ஜியோ வழங்கும் ரூ.1999 சலுகையில் 180 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் 125 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    Next Story
    ×