search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    அமோக விற்பனையில் ரெட்மி 12 சீரீஸ்- நன்றி தெரிவித்து சியோமி இந்தியா டுவீட்
    X

    அமோக விற்பனையில் ரெட்மி 12 சீரீஸ்- நன்றி தெரிவித்து சியோமி இந்தியா டுவீட்

    • ஸ்மார்ட்போன்களின் விற்பனை கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் தொடங்கியது.
    • நமது கூட்டு முயற்சியால், இந்தியாவின் 5ஜி புரட்சியின் தொடக்கத்தை எங்களால் தொடங்க முடிந்தது.

    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை ரெட்மி பிரான்டிங்கில் அறிமுகம் செய்தது.

    ரெட்மி 12 மற்றும் ரெட்மி 12 5ஜி என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 10 ஆயிரத்தில் துவங்கி ரூ. 13 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ரெட்மி 12 மற்றும் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன்கள் மூன்ஸ்டோன் சில்வர், பேஸ்டல் புளூ மற்றும் ஜேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

    ரெட்மி 12 மாடலின் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. இதன் டாப் என்ட் மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ரெட்மி 12 5ஜி மாடலின் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என்று துவங்கி, டாப் என்ட் மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் தொடங்கியது.


    பட்ஜெட் பிரெண்ட்லியில் சிறப்பு அம்சங்களுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கு மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதனால், சியோமி நிறுவனம் விற்பனை தொடங்கி 28 நாட்களில் ஒரு மில்லியன் ரெட்மி 12 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

    இதற்கு இந்திய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, சியோமி நிறுவனம் அதன் சியோமி இந்தியா டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளது.

    அதில், "ரெட்மி 12 சீரீஸ் விற்பனைக்கு வந்த 4 வாரங்களுக்குள் 1 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

    சியோமி, 'அனைவருக்கும் புதுமை' என்ற அர்ப்பணிப்பில் உறுதியுடன் இருப்பதை உறுதிசெய்த ரசிகர்கள், மதிப்பிற்குரிய கூட்டாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் கருத்துக்களால் இந்த மைல்கல் அடையப்பட்டுள்ளது.

    நமது கூட்டு முயற்சியால், இந்தியாவின் 5ஜி புரட்சியின் தொடக்கத்தை எங்களால் தொடங்க முடிந்தது.

    ஒன்றாக, நாங்கள் தொடர்ந்து புதிய பாதைகளை உருவாக்குவோம், தடைகளை உடைப்போம் மற்றும் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை மறுவரையறை செய்வோம்" என்று சியோமி இந்தியா மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளது.

    Next Story
    ×