search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீசித்ரகுப்தர் கோவில்"

    • சித்ரா பெளர்ணமி பூஜை மற்றும் பொங்கல் விழா இன்று நடைபெற்றது
    • சித்ரகுப்தர் திருவீதி உலா ஊஞ்சல் ராகத்துடன் திருக்கோவில் வந்தடைந்தது

     திருப்பூர் : 

    திருப்பூர் சின்னாண்டிபாளையம் சித்ரகுப்தர் திருக்கோவிலில் 94ம் ஆண்டு சித்ரா பெளர்ணமி பூஜை மற்றும் பொங்கல் விழா இன்று நடைபெற்றது. நேற்று விநாயகர் பூஜையுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியானது சித்ரகுப்தர் திருவீதி உலா ஊஞ்சல் ராகத்துடன் திருக்கோவில் வந்தடைந்தது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு யாகம் துவங்கப்பட்டு பூர்ணாஹூதி செய்யப்பட்டு சித்ர குப்தருக்கு தேன்,நெய்,பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் இவற்றுடன் கலசாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சித்ரகுப்தருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அன்னம் படைத்து, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைக்கும் வழிபாடு செய்தனர்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சித்ரகுப்தரை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • நடப்பு ஆண்டில் 94ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா ஏற்பாடுகள் துவங்கியுள்ளது.
    • 4-ந் தேதி விநாயகர் பூஜை, சித்ரகுப்தர் சிறப்பு அலங்காரம், சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக திருப்பூர் சின்னாண்டிபாளையத்தில் ஸ்ரீசித்ரகுப்தர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளில் நடக்கும் விழாவில் 6 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்று வழிபடுகின்றனர்.

    நடப்பு ஆண்டில் 94ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா ஏற்பாடுகள் துவங்கியுள்ளது.வருகிற 4-ந் தேதி விநாயகர் பூஜை, சித்ர குப்தர் சிறப்பு அலங்காரம், சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. மறுநாள் சிறப்பு யாகசாலை பூஜை, சித்தி விநாயகர், சித்ரகுப்தருக்கு கலச அபிேஷகம், அலங்கார பூஜை நடக்கிறது.கூனம்பட்டி திருமடம் நடராஜசுவாமி தலைமையில், ஸ்ரீசித்ரகுப்தர் பூஜைகள் நிறைவு பெற்றதும், கதை படிக்கும் நிகழ்வு அன்னம்படைத்தல், மகாதீபாராதனை நடைபெறும்.காலை 11 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஸ்ரீசித்ரகுப்தர் ஆலய விழா குழுவினர், மாத பவுர்ணமி பூஜை குழுவினர் மற்றும் பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    ×