search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில்"

    • முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்களும், மாகரல் கண்டிகை கிராம பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மாகரல் கண்டிகை கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் உள்ளது. கிராம தேவதையான ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவிலில் கடந்த 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை திருவிழா நடைபெற்றது. புதன்கிழமை இரவு பொன்னியம்மன் பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    கடந்த 23-ம் தேதி வெள்ளிக்கிழமை விடியற்காலை தர்மராஜா கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சியும், காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் திரெளபதி அம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழா துவங்கியது. ஞாயிற்றுக்கிழமை மாலை புனித நீர் ஆடி, காப்பு கட்டி விரதம் இருந்த கிராம மக்களை, அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஊர் எல்லைக்கு சென்று கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதன் பின்னர், கோவிலின் எதிரே அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் ஒருவர் பின், ஒருவராக இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதன் பின்னர்,கோவில் வளாகத்தில் வான வேடிக்கையும், அம்மன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இன்று மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியும், தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்களும், மாகரல் கண்டிகை கிராம பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    ×