search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ட்ராபெர்ரி மபின்"

    • குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • ஸ்ட்ராபெர்ரி மபின் என்றால் சொல்லவே வேண்டாம் ஒரே குஷி தான்

    குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ஸ்ட்ராபெர்ரி மபின் என்றால் சொல்லவே வேண்டாம் குஷியாகி விடுவார்கள். நீங்கள் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தரலாம் அல்லது காபி அல்லது டீ யுடன் பரிமாறலாம்.

    தேவையான பொருட்கள்:

    மைதா 125 கிராம்

    பொடித்த சர்க்கரை - 100 கிராம்

    கெட்டியான தயிர் -60 மி.லி

    சமையல் எண்ணெய்- 60 மி.லி

    பால்- 100 மி.லி

    பேக்கிங் பவுடர்- 1 டீஸ்பூன்

    பேக்கிங் சோடா- 2 டீஸ்பூன்

    வெண்ணிலா எசன்ஸ்- 3 துளிகள்

    ஸ்ட்ராபெர்ரி பழங்கள் (பொடிதாக நறுக்கியது)- 100 கிராம்

    உப்பு- ஒரு சிட்டிகை

    செய்முறை:

    மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சலித்து வையுங்கள். அகலமான பாத்திரத்தில் தயிர், பொடித்த சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை போட்டு நன்றாக அடித்து கலக்குங்கள். பின்பு அதில் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதன்பிறகு அதில் மைதா கலவை மற்றும் உப்பு சேர்த்து கிளற வேண்டும். இப்போது இந்த கலவையில் பாலை சிறிது சிறி தாக ஊற்றி தோசை மாவு பதத்துக்கு தயார் செய்துகொள்ள வேண்டும்.

    கடைசியாக ஸ்ட்ராபெர்ரி பழத்தை அதனுடன் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். இந்த மாவை மபின் கப்புகளில் முக்கால் பங்கு அளவிற்கு மட்டும் ஊற்றுங்கள்.

    ஓவனை சூடுபடுத்திய பின்பு (பிரிஹிட்) மபின்களை உள்ளே வைத்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 20 முதல் 25 நிமிடங்கள் வரை பேக்கிங் செய்து வெளியே எடுங்கள். இப்போது பொன் நிறத்தில் சுவையான ஸ்ட்ராபெர்ரி மபின்கள் தயார். இதை 10 நிமிடங்கள் கழித்து, ஆறிய பிறகு பரிமாறுங்கள்.

    ×