search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்நாக்"

    • குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • ஸ்ட்ராபெர்ரி மபின் என்றால் சொல்லவே வேண்டாம் ஒரே குஷி தான்

    குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ஸ்ட்ராபெர்ரி மபின் என்றால் சொல்லவே வேண்டாம் குஷியாகி விடுவார்கள். நீங்கள் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தரலாம் அல்லது காபி அல்லது டீ யுடன் பரிமாறலாம்.

    தேவையான பொருட்கள்:

    மைதா 125 கிராம்

    பொடித்த சர்க்கரை - 100 கிராம்

    கெட்டியான தயிர் -60 மி.லி

    சமையல் எண்ணெய்- 60 மி.லி

    பால்- 100 மி.லி

    பேக்கிங் பவுடர்- 1 டீஸ்பூன்

    பேக்கிங் சோடா- 2 டீஸ்பூன்

    வெண்ணிலா எசன்ஸ்- 3 துளிகள்

    ஸ்ட்ராபெர்ரி பழங்கள் (பொடிதாக நறுக்கியது)- 100 கிராம்

    உப்பு- ஒரு சிட்டிகை

    செய்முறை:

    மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சலித்து வையுங்கள். அகலமான பாத்திரத்தில் தயிர், பொடித்த சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை போட்டு நன்றாக அடித்து கலக்குங்கள். பின்பு அதில் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதன்பிறகு அதில் மைதா கலவை மற்றும் உப்பு சேர்த்து கிளற வேண்டும். இப்போது இந்த கலவையில் பாலை சிறிது சிறி தாக ஊற்றி தோசை மாவு பதத்துக்கு தயார் செய்துகொள்ள வேண்டும்.

    கடைசியாக ஸ்ட்ராபெர்ரி பழத்தை அதனுடன் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். இந்த மாவை மபின் கப்புகளில் முக்கால் பங்கு அளவிற்கு மட்டும் ஊற்றுங்கள்.

    ஓவனை சூடுபடுத்திய பின்பு (பிரிஹிட்) மபின்களை உள்ளே வைத்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 20 முதல் 25 நிமிடங்கள் வரை பேக்கிங் செய்து வெளியே எடுங்கள். இப்போது பொன் நிறத்தில் சுவையான ஸ்ட்ராபெர்ரி மபின்கள் தயார். இதை 10 நிமிடங்கள் கழித்து, ஆறிய பிறகு பரிமாறுங்கள்.

    • ஒரு மாதம் வரை கூட கெட்டுப்போகாது.
    • பாதாம் அல்லது பிஸ்தா பருப்பு வைத்து அலங்கரிக்கலாம்.

    சின்ன வயசுல பக்கத்துல பெட்டி கடையில எல்லாம் கிடைக்கும் ஸ்வீட் தான் இது. பொட்டுக்கடலை கேக் ரெசிபி. ஒரு 10 நிமிடத்தில் இன்ஸ்டண்ட்டாக செய்து முடித்துவிடலாம். எப்படி செய்வது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். உங்க வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து சுலபமாக இந்த ஸ்வீட் ரெசிபியை செய்யலாம். இந்த ஸ்பீட் செய்து காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் 1 மாதம் வரை கூட கெட்டுப்போகாது. சரி சரி அந்த சூப்பர் ரெசிபியை நேரத்தைக் கடத்தாமல் இப்போதே பார்க்கலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்

    பொட்டுக்கடலை- ஒரு கப்

    சர்க்கரை- ஒரு கப்

    ஏலக்காய் பொடி- ஒரு ஸ்பூன்

    நெய் – 1/4 கப்

    முந்திரி- அலங்கரிக்க மட்டும்

    செய்முறை

    முதலில் மிக்சி ஜாரில் பொட்டுக்கடலையையும் சர்க்கரையையும் ஏலக்காயையும் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

    அரைத்த இந்த மாவை இரண்டு முறை நன்றாக சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாவு நறநறவென இருந்தால் ஸ்வீட் ரெசிபி நறநறப்பாக வந்துவிடும். பொட்டுக்கடலை எந்த கப்பில் அளக்கிறீர்களோ அதே கப்பில் சர்க்கரையையும் அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் தேவைப்பட்டால் பால் பவுடர் கூட சேர்த்து செய்யலாம். சுவை கூடுதலாக இருக்கும்.

    அரைத்த சலித்த இந்த பொடியை ஒரு அகலமான பவுலில் போட்டு 1/4 கப் அளவு நெய்யை இதோடு சேர்த்து நன்றாக பிசைந்து கொண்டே இருக்க வேண்டும். ஐந்தில் இருந்து ஏழு நிமிடங்கள் அழுத்தம் கொடுத்து பிசைந்தால் போதும்.

    மாவு நன்றாக ஒட்டி பிடித்து பால்கோவா, குலோப் ஜாமுன் மாவு போல நமக்கு கிடைக்கும். அந்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து கையில் கேக் போல தட்டி உங்களுடைய வீட்டில் பால்பேடா அச்சு இருந்தால் அதில் இந்த பொட்டுக்கடலை மாவை வைத்து பேடா போல ஷேப்பில் மாற்றியும் செய்து கொள்ளலாம். அதன் நடுவே பாதாம் அல்லது பிஸ்தா பருப்பு வைத்து அலங்கரிக்கலாம்.

    சிறிய சிறிய அளவு மூடியில் இந்த மாவை வட்ட வடிவத்தில் வெட்டி, கத்தியை வைத்து நான்கு கோடு போட்டு கூட குழந்தைகளுக்கு அழகாக கொடுக்கலாம். அது நம்முடைய விருப்பம் தான்.

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
    • ஸ்கூல் ஸ்நாக்காகவும் கொடுத்துவிடலாம்.

    காலை சிற்றுண்டியாக தினமும், இட்லி, தோசை, உப்புமா, என்று சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு இந்த வாழைப்பழம் பிரட் டோஸ்ட் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். செய்வதும் எளிதானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு இதனை ஸ்கூல் ஸ்நாக்காகவும் கொடுத்துவிடலாம் அல்லது ஈவ்னிங் ஸ்நாக்காகவும் செய்து கொடுத்து அசத்தலாம்.

    தேவையான பொருட்கள்:

    பிரட் துண்டுகள்- 1

    வாழைப்பழம்- 2

    முட்டை- 1

    சர்க்கரை- 4 ஸ்ப்பூன்

    தேங்காய்துருவல்- ஒரு கப்

    செய்முறை:

    வாழைப்பழங்களை தோலுரித்து அதனை வட்ட வடிவங்களாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு முட்டையை ஒரு பவுளில் உடைத்து ஊற்றி அதில் சிறிதளவு சர்க்கரை, 5 ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக அடித்து கலக்கி கொள்ள வேண்டும்.

    வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு காய்ந்ததும் அதில் வாழைப்பழ துண்டுகள் மற்றும் அதன்மேல் சர்க்கரை, தேங்காய் துருவல்களை தூவி பிரட்டி எடுக்க வேண்டும். இதனை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை வெட்டி விட்டு அதனை சப்பாத்தி தேய்க்கும் கட்டையால் பிரட்டுகளை தட்டையாக தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் நடுவே வாழைப்பழங்களை வைத்து ரோல் செய்ய வேண்டும். இவ்வாறு அனைத்து ரோல்களையும் செய்து அடுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் தோசை தவாவை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு காயந்ததும் இந்த பிரட் ரோல்களை எடுத்து முட்டை கலவையில் முன்னும் பின்னுமாக புரட்டி எடுத்து தோசை தவாவில் சேர்க்க வேண்டும். இதனை திருப்பி திருப்பி போட்டு டோஸ்ட் செய்து எடுக்க வேண்டும். அருமையான வாழைப்பழ பிரட் டோஸ்ட் தயார்.

    • புட்டு ஒரு ஆரோக்கியமான உணவு.
    • கோதுமை புட்டு, கேழ்வரகு புட்டு, சிவப்பரிசி புட்டு என பல வகைகள் உள்ளன.

    புட்டு ஒரு ஆரோக்கியமான உணவு. இதில் கோதுமை புட்டு, கேழ்வரகு புட்டு, சிவப்பரிசி புட்டு என பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான புட்டு பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக சிப்ஸ் உள்ளிட்டவற்றை கொடுப்பதற்கு பதிலாக ஆவில் வேகவைத்து செய்யும் பலகாரங்கள் போன்றவற்றை செய்து கொடுக்கலாம். செட்டிநாடு ஸ்பெஷல் ரங்கூன் புட்டு எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்

    ரவை -ஒரு டம்ளர்

    வெல்லம்-100 கிராம்

    ஏலக்காய் -3

    நெய்- தேவையான அளவு

    தேங்காய்- அரை மூடி

    திராட்சை-6

    முந்திரி பருப்பு -15

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் 100 கிராம் வெல்லத்தை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். வெல்லம் முழுமையாக உருகியது அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறியதும், அதை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் முந்திரியை சேர்த்து வறுக்க வேண்டும். முந்திரி நிறம் மாற ஆரம்பிக்கும் போது அதில் திராட்சையை சேர்த்து வறுக்க வேண்டும். இவை இரண்டையும் வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது அதே வாணலியில் அரை மூடி தேங்காயை எடுத்து நன்றாக வறுக்க வேண்டும். தேங்காய் நெய்யில் பொன்னிறமாக மாறியதும், அதையும் வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

    மீண்டும் அதே வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் ரவையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து, ரவையை நன்றாக, அதே நேரத்தில் கருகிவிடாமல் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ரவை சிவக்க ஆரம்பிக்கும் போது அதில் ஏற்கனவே வடிகட்டி எடுத்து வைத்த வெல்லப்பாகை சேர்க்க வேண்டும். இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விட வேண்டும். வெல்லம் முழுமையாக ரவையில் மிக்ஸ் ஆனதும், அதில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு நன்றாக கிளறி விட வேண்டும். அதில் அரைஸ்பூன் ஏலக்காய் பவுடர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

    பின்னர் ஏற்கனவே வறுத்து வைத்த முந்திரி திராட்சை, தேங்காய் ஆகியவற்றை இதில் சேர்க்க வேண்டும். இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி போட்டு 5 நிமிடம் வரை வேக விட வேண்டும். பின்னர் இதில் தேவையான அளவு நெய் சேர்த்து நன்றாக கிளறி விட்டால், சுவையாக ரங்கூன் புட்டு தயார்.

    • வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
    • வெல்லம் சேர்த்து அதிகமானோர் குழி பணியாரம் செய்வார்கள்.

    குளிர்காலம், மழைக்காலம் போன்ற காலங்களில் மாலை நேரங்களில் காபி, டீயுடன் சூடாக ஒரு ஸ்னாக்ஸ் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான ஒரு மாலைநேர சிற்றுண்டி ரெசிபியை தான் காண உள்ளோம். வெல்லம் சேர்த்து அதிகமானோர் குழி பணியாரம் செய்வார்கள். ஆனால் இன்று நாம் காரசாரமான குழி பணியாரத்தை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

    தேவையான பொருட்கள்:

    இட்லி மாவு - 1 கப்

    வெங்காயம்- 1 (பொடிதாக நறுக்கியது)

    கேரட்- 1 (துருவியது)

    கொத்தமல்லித்தழை- 1 (பொடிதாக நறுக்கியது)

    பச்சை மிளகாய்- 1 டீஸ்பூன் (பொடிதாக நறுக்கியது)

    கறிவேப்பிலை- 1 டீஸ்பூன் (பொடிதாக நறுக்கியது)

    கடலைப்பருப்பு- 1 டீஸ்பூன்

    உளுந்து - 1 டீஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    கடுகு- 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பெருங்காயப்பொடி- 1 டீஸ்பூன்

    மஞ்சள்தூள்- டீஸ்பூன்

    செய்முறை:

    அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். பின்னர் அதில் கடுகு, உளுந்தப்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு தாளிக்க வேண்டும். அதன்பிறகு அதில் கறிவேப்பிலை, நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயம் போன்றவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும். பின்னர் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இந்த கலவை ஆறியதும் இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

    அடுப்பில் குழிப்பணியாரக் கல்லை வைத்து சூடானதும். அதன் ஒவ்வொரு குழியிலும் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். ஒவ்வொரு குழியிலும் முக்கால் அளவுக்கு மாவை ஊற்றி. இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவைத்து திருப்பி போட்டு எடுக்க வேண்டும். இப்போது சுவையான "மசாலா குழிப்பணியாரம் தயார். இதை காரசட்னி, புதினா சட்னியுடன் சேர்த்து சுவைக்கலாம்.

    • சப்பாத்தியை வைத்து சூப்பரா ஒரு லட்டு செய்யலாம்.
    • நட்ஸ் வகைகளையும் நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம்.

    நம்முடைய பிரதான உணவுகளாக இட்லி, தோசையுடன் சேர்ந்து சப்பாத்தியும் முதன்மை உணவாக மாறிவிட்டது. இந்த சப்பாத்தியை வைத்து சூப்பரா ஒரு லட்டு செய்ய முடியும். செய்து சாப்பிட்டு பார்க்கலாமா? வாங்க பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    சப்பாத்தி - 6

    நெய் - 4 ஸ்பூன்,

    பால் - 4 ஸ்பூன்,

    பால் பவுடர் - 3 ஸ்பூன்,

    நாட்டுச் சர்க்கரை - கால் கப்,

    ஏலக்காய் பொடி - அரை ஸ்பூன்,

    செய்முறை:

    முதலில் சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய்யை சேர்த்து அதில் பொடித்த சப்பாத்தியை சேர்த்து வதக்க வேண்டும். இதில் எடுத்து வைத்திருக்கும் பாலை தெளித்து கொஞ்சம் ஈரமாக்கிக் கொள்ள வேண்டும்.

    அடுத்ததாக பால் பவுடரையும், நாட்டுச் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கி வையுங்கள். இதோடு நீங்கள் நட்ஸ் வகைகளையும் நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம். மீதமுள்ள நெய்யையும் சூடாக்கி இந்த கலவையில் சேர்த்து கை பொறுக்கும் சூட்டில் சிறு சிறு உருண்டைகளாக பிடித்தால் சுவையான சப்பாத்தி லட்டு ரெடி.

    • எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம்.
    • பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

    இந்த உருளைக்கிழங்கு முறுக்கு குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த முறுக்கை செய்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி மாவு- 2 கப்

    உளுந்து 2 கப்

    வெண்ணெய் 2 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    உருளைக்கிழங்கு- 2

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    தண்ணீர் தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு டீஸ்பூன் மிளகை உரலில் போட்டு பாதியாக உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உளுந்தை மிதமான தீயில் சிவக்க வறுக்கவும், அது ஆறிய பின்னர் உலர்ந்த மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்துக்கொள்ள வேண்டும்,

    பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், மிளகு, உப்பு, உருக்கிய வெண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் முறுக்கு அச்சின் உட்புறம் நெய் அல்லது எண்ணெய் தடவி பிசைந்து வைத்திருக்கும் மாவை அதில் போட்டு, முறுக்காக பிழிந்து எண்ணெய்யில் போட்டு சிவக்கும் அளவிற்கு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான "உருளைக் கிழங்கு முறுக்கு' தயார்.

    • அருமையான தேநீர் நேர சிற்றுண்டி.
    • இந்த முறுக்கு செய்ய சில துண்டுகள் போதும்.

    அருமையான தேநீர் நேர சிற்றுண்டி. இந்த முறுக்கு செய்ய சில துண்டுகள் போதும், எனவே நீங்கள் மரவள்ளிக்கிழங்கு சமைக்கும் போது, சிறிது சேமித்து இந்த முறுக்கை முயற்சிக்கவும். மரவள்ளிக்கிழங்கை, கப்பா, குச்சி கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது.

    தேவையான பொருட்கள்:

    மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ

    பச்சரிசி மாவு - 1/4 கிலோ

    இஞ்சி - 1 அங்குல துண்டு

    பச்சை மிளகாய் - 10

    ஓமம் - 2 டீஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    வெண்ணெய் - 100 கிராம்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    இஞ்சி, பச்சை மிளகாய், ஓமம் இம்மூன்றையும் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து மேல் தோலை நீக்கிவிட்டு துருவிக்கொள்ள வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் மரவள்ளிக்கிழங்கு, அரிசி மாவு, அரைத்த விழுது உப்பு, வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.

    அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய்யை ஊற்றி சூடுபடுத்த வேண்டும். அதன்பிறகு முறுக்கு அச்சில் எண்ணெய் பூசி அதில் மாவைப்போட்டு முறுக்குகளாகப் பிழிந்து சிவக்கும் அளவுக்கு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது மொறுமொறுப்பான மரவள்ளிக்கிழங்கு முறுக்கு தயார்.

    குறிப்பு: கிழங்குகளை பயன்படுத்தி முறுக்கு தயாரிக்கும்போது. மாவு பிசைவதற்கு வெந்நீர் பயன்படுத்தலாம். இதனால் மாவு மென்மையாக இருப்பதுடன், எளிதில் பிசையவும் முடியும்.

    • அடை மாவு போலத்தான் குணுக்கிற்கும் மாவு அரைக்க வேண்டும்.
    • போண்டா செய்வது போல கொஞ்சம் திக்காக இருக்க வேண்டும்.

    அடை மாவு போலத்தான் இந்த குணுக்கிற்கும் மாவு அரைக்க வேண்டும். அடை மாவை கொஞ்சம் தண்ணீராக அரைப்போம். இந்த குணுக்கிற்கு போண்டா செய்வது போல கொஞ்சம் திக்காக மாவு அரைத்துக் கொள்ள வேண்டும். தஞ்சாவூர் கும்பகோணம் பக்கங்களில் இந்த குணுக்கு ரொம்பவும் பிரபலம். சுவையான முறையில் அதேசமயம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய வகையில் சாமை குணுக்கு செய்வது எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்:

    சாமை - 50 கிராம்

    பச்சைப்பருப்பு, கொண்டைக்கடலை - தலா 25 கிராம்

    பச்சரிசி - ஒரு டீஸ்பூன்

    சீரகம் - கால் டீஸ்பூன்

    சின்ன வெங்காயம் - 2 (நறுக்கியது)

    பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    எண்ணெய் - 200 கிராம்

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் சாமை, பச்சைப்பருப்பு, பச்சரிசி அனைத்தையும் அரை மணி நேரம் ஊறவைத்து, இவற்றுடன் ஊறவைத்த கொண்டைக்கடலையையும் சேர்த்து ரவை ரவையாக கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    இதில் உப்பு, சீரகம், கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக பிசைந்து, சிறிது சிறிதாக கிள்ளி சூடான எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும். சுவையான சாமை குணுக்கு தயார். மழைக்காலங்களில் ஈவ்னிங் சூடான டீயுடன் பரிமாற அருமையாக இருக்கும்.

    • பச்சைமிளகாய் சாஸ் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
    • உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும்.

    தேவையான பொருட்கள்

    மைதா - 1 கப்

    கோதுமை மாவு - 1 கப்

    அரிசி மாவு - 1 கப்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய் - தேவைக்கு

    ரவை - 1/4 கப்

    தக்காளி - 2 கப்

    வெங்காயம் - 2

    குடைமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்

    முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

    துருவிய சீஸ் - 1 கப்

    உதிர்த்து வேகவைத்த ஸ்வீட் கார்ன் - 2 டேபிள்ஸ்பூன்

    வெண்ணெய் - சிறிது

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    மிளகு தூள் - 1 டீஸ்பூன்

    உருளைக்கிழங்கு - 250 கிராம்

    பச்சைமிளகாய் சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, ரவை உப்பு, மிளகுத்தூள், தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் தக்காளி, வெங்காயம், ஸ்வீட் கார்ன், முந்திரி, குடைமிளகாய், உருளைக்கிழங்கு துண்டுகள், உப்பு, வெண்ணெய், பச்சைமிளகாய் சாஸ் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.

    தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை கனமான தோசையாக ஊற்றி, அதன் மீது கலந்த கலவையை பரப்பி, அதன் மேல் கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல் தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடிவைத்து வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

    • பால் குடிப்பது என்பது பல குழந்தைகளுக்குப் பிடிக்காத ஒன்று.
    • இந்த பால் கேக் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

    தினமும் மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி செய்து சாப்பிட வேண்டும் என ஆசைப்படுவீர்கள். குழந்தைகள் பலருக்கும் தினமும் ஒரே ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பிடிக்காது. பால் குடிப்பது என்பது பல குழந்தைகளுக்குப் பிடிக்காத ஒன்று. ஆனால் அதில் அதிகப்படியான சத்துகள் நிறைந்துள்ளது.

    இந்த பால் கேக் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு ரெசிபியாக இருக்கும். இந்த பதிவில் மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக பால் கேக் செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    தேவையான பொருள்கள்

    சர்க்கரை- 6 டேபிள் ஸ்பூன்

    வெண்ணிலா எசன்ஸ் – 3 டீஸ்பூன்

    பால் – 2 கப்

    முட்டை – 4

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தில் நான்கு முட்டைகளையும் உடைத்து சேர்த்து நன்றாக அடித்து கலக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை சேர்த்து கொள்ளவும். அதில் இரண்டு டம்ளர் அளவிற்குத் தண்ணீர் சேர்த்து நன்றாக சர்க்கரை கரையும் வரை கிளறவும். சர்க்கரை பாகு நன்கு கரைந்து நிறம் மாறி வரவேண்டும். அதனை கேக் செய்யும் பாத்திரத்தில் ஊற்றி வைக்க வேண்டும்.

    அதன்பிறகு மற்றொரு பாத்திரத்தை எடுத்து அதில் கலக்கிய முட்டை மற்றும் இரண்டு கப் அளவிற்குப் பால் சேர்க்க வேண்டும். அதில் மூன்று டீஸ்பூன் அளவிற்கு வெண்ணிலா எசன்ஸ் மற்றும் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

    இந்த கலவையை நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள சர்க்கரை பாகு கலவையில் சேர்த்து இதனை ஒரு இட்லி பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து அதில் நாம் கலக்கிய கலவை உள்ள பாத்திரத்தை எடுத்து அதில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும். இதை 10 முதல் 20 நிமிடங்கள் வேக விட்டு எடுத்தால் பால் கேக் தயார்.

    இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் சாப்பிட்ட பின், மீண்டும் மீண்டும் வேண்டும் எனக் கேட்கும் அளவிற்குச் சுவையாக இருக்கும். பால் மற்றும் முட்டையில் அதிகமாக சத்துகள் உள்ளதால் குழந்தைகள் அதிகமாக சாப்பிடலாம்.

    • பன் ரெசிபியை, உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.
    • ஓவன் இல்லாமல் மிகவும் எளிதாக நம்முடைய வீட்டிலேயே செய்யலாம்.

    டீக்கடைகளில் விற்கப்படும் பன்களை ஓவன் இல்லாமல் மிகவும் எளிதாக நம்முடைய வீட்டிலேயே செய்யலாம். பொதுவாகவே குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த சாஃப்டான பன், நம்முடைய வீட்டில் செய்தால் அம்மாக்களுக்கு அது மிகப் பெரிய சந்தோசத்தை கொடுக்கும். உங்கள் குழந்தைகளுக்கு நீங்களும், உங்கள் கையாலேயே பன் செய்து தர வேண்டும் என்ற ஆசை இருக்கா? இந்த குறிப்பை முழுமையாக படித்து, இன்னைக்கு ஈவ்னிங் இந்த பன் ரெசிபியை, உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

    தேவையான பொருட்கள்

    மைதா- 1/2 கிலோ

    சர்க்கரை- ஒரு ஸ்பூன்,

    உப்பு- ஒரு சிட்டிகை

    முட்டை- 1

    பால்-200 கிராம்

    ஈஸ்ட்- 1/2 ஸ்பூன்

    வெண்ணெய்- 2 ஸ்பூன்

    செய்முறை:

    ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் முதலில் ஈஸ்டை சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு கரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக கரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு முட்டைடை அதனுடன் சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும்.

    இந்த கலவையுடன் பால் சேர்க்க வேண்டும். இதில் மைதா மாவு சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பால் விட்டு பிசைந்து அரைமணிநேரம் மூடிபோட்டு ஊற வைக்க வேண்டும். அரைமணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் பிசைந்து வைத்த மாவுக்கலவை உப்பலாக இருக்கும்.

    இந்த மாவுக்கலவையை மீண்டும் ஒருமுறை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவு உருண்டைகளை ஒரு தட்டில் வெண்ணெய் தடவி அதில் வரிசையாக இடைவெளி விட்டு அடுக்கிக்கொள்ள வேண்டும்.

    இப்போது அடுப்பில் ஒரு அடி கனமாக பாத்திரம் வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதனை 10 நிமிடத்திற்கு ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். 10 நிமிடம் கழித்து நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பன் உருண்டைகளை எடுத்து அதனுள் வைத்து ஆவி வெளியே போகாத அளவுக்கு 25 நிமிடம் மூடிபோட்டு மூட வேண்டும். 25 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான டீக்கடை பன் தயார். இதன் மேல் வெண்ணெய் தடவி சூடு ஆறியதும் பரிமாறலாம்.

    ×