search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    முட்டை இல்லாத பட்டர் பிஸ்கட்
    X

    முட்டை இல்லாத பட்டர் பிஸ்கட்

    • பள்ளிகளுக்கு ஸ்நாக்காக கொண்டு செல்வதற்கு ஏற்றது.
    • அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு நல்ல ஸ்நாக்காக இருக்கும்.

    டீ டைம் என்று சொன்னதும் அனைவரின் நினைவுக்கு வருவது ஒரு கிளாஸ் டீயும், இரண்டு பிஸ்கட்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த டீ பிஸ்கட்டுக்கு அடிமையாக இருக்கிறார்கள். இன்று நாம் வீட்டிலேயே எவ்வாறு பிஸ்கட் செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம். கடைகளில் வாங்கும் பிஸ்கட்டில் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய சில பொருட்கள் இருக்கும். அந்த பொருட்கள் எதையும் சேர்க்காமல் நாம் நம் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அருமையான பிஸ்கட்டை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    கண்டன்ஸ்டு மில்க்- 1 பாட்டில்

    சோளமாவு (கான்பிளவர்)- ஒரு கப்

    வெண்ணெய்- 25 கிராம்

    உப்பு- தேவைக்கேற்ப

    செய்முறை:

    கொடுக்கப்பட்டுள்ள கான்பிளவர் மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அடிகனமான பவுளில் கண்டன்ஸ்டு மில்கை ஊற்றி அதில் சிறிது சிறிதாக கான்பிளவர் மாவை சேர்த்து கிளர வேண்டும். சப்பாத்தி மாவு பதத்திற்கு கலவை வந்தவுடன் அதில் வெண்ணெய் சேர்த்து மீண்டும் நன்றாக கிளற வேண்டும். வெண்ணெய் சேர்த்தவுடன் மாவுக்கலவையை நன்றாக பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வட்ட வடிவில் பிஸ்கட்டுகளாக திரட்டி ஒரு வெண்ணெய் தடவிய தட்டில் வரிசையாக அடுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஒரு அடி கனமான இரும்புக் கடாயின் உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து அதை அடுப்பில் 10 நிமிடம் ஃப்ரிஹீட் செய்ய வேண்டும். பின்னர் அதில் தயாராக பிஸ்கட்டுகளை அடுக்கி வைத்துள்ள தட்டை உள்ளே வைத்து மூடி வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து திறந்து பார்க்க வேண்டும். கிரிஸ்பியான பட்டர் பிஸ்கட் தயார். சூடு ஆறியதும் பிஸ்கட்டுகளை எடுத்து காற்று புகாத டப்பாவில் வைக்க வேண்டும். ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது.

    குழந்தைகள் பள்ளிகளுக்கு ஸ்நாக்காக கொண்டு செல்வதற்கும், ஈவ்னிங் ஸ்நாக்காக சாப்பிடுவதற்கும் மிகவும் உகந்தது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு நல்ல ஸ்நாக்காக இருக்கும்.

    Next Story
    ×