என் மலர்
நீங்கள் தேடியது "அரிசி உருண்டை"
- கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், புளி ஆகியவற்றை வதக்கி, பின்னர் மிக்சியில் விழுதாக அரைக்கவும்.
- அரைத்த விழுது, பெருங்காயத்தூள், உப்பு, நெய் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
தேவையான பொருட்கள்:
அரிசி ரவை-2 கப்
கொத்தமல்லித்தழை - சின்ன கட்டு
பச்சை மிளகாய் -3
தேங்காய்த் துருவல் - 4 கப்
நெய் - 2 டீஸ்பூன்
புளி - சிறிதளவு
கடுகு - 1½ டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு தலா - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் ½ டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், புளி ஆகியவற்றை வதக்கி, பின்னர் மிக்சியில் விழுதாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, 5 கப் நீர் ஊற்றவும். அதில் அரைத்த விழுது, பெருங்காயத்தூள், உப்பு, நெய் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
நன்கு கொதிக்கும்போது, அடுப்பை 'சிம்'மில் வைத்து, அரிசி ரவையை சேர்த்து கைவிடாமல் கிளறி, மூடிபோட்டு 10 நிமிடம் வேகவிட்டு இறக்கவும். ஆறியதும் சிறு உருண்டைகளாகப் பிடித்து, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுத்தால் சுவையான கொத்தமல்லி கார உருண்டை தயார்.
- குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு
- செய்வதற்கு மிகவும் எளிதானது.
தேவையான பொருட்கள்:
புலுங்கல் அரிசி -ஒரு கப்
நெய் - இரண்டு ஸ்பூன்
வெல்லம் -ஒரு கப்
தேங்காய் துருவல்- ஒரு கப்
ஏலக்காய் தூள் -ஒரு சிட்டிகை
முந்திரி
செய்முறை:-
அரிசியை தண்ணீர் விட்டு கழுவி எடுத்து அதனை ஒரு கடாயில் போட்டு நன்றாக நிறம் மாறும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும், பின்னர் சூடு தணிந்ததும் அதனை மிக்சியில் பொடித்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதன்பிறகு ஒரு கடாயில் வெல்லம் சேர்த்து வெல்லம் மூழ்கும் அளவுக்கு நீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். வெல்லம் நன்றாக கரைந்ததும் அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.
பொடித்த அரிசியுடன், தேங்காய், ஏலக்காய், வெல்லப்பாகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இதனுடன் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி உருண்டைகளாக பிடிக்க வேண்டும். உருண்டை பிடித்த அரிசி உருண்டையின் மீது முந்திரிகளை அலங்கரித்து பரிமாறலாம். அரிசி உருண்டை தயார். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு. செய்வதற்கும் மிகவும் எளிதானது.