என் மலர்
நீங்கள் தேடியது "rava cake"
- பாகு சூடாக இருக்கும்வரை லட்டு பிடிக்கக்கூடாது.
- 10 - 15 நாட்கள்வரை ரவா லட்டுவை வைத்து சாப்பிடலாம்.
அரைமணி நேரத்தில் ஈஸியாக செய்யக்கூடிய தீபாவளி பலகாரம் குறித்துதான் பார்க்கப் போகிறோம். அது வேறு ஒன்றும் இல்லை, ரவா லட்டுதான். பலரும் ரவா லட்டு செய்ய ஜவ்வரிசி, கடலை, பால் பயன்படுத்துவார்கள். ஆனால் இவை எதுவும் இல்லாமல், அரைமணி நேரத்தில் எளிமையான, இரண்டு வாரத்திற்கு வைத்து சாப்பிடக்கூடிய ரவா லட்டு செய்வது எப்படி என பார்ப்போம்.

முதலில் கடாயில் நெய்யை ஊற்றி, அது லேசாக சூடானவுடன் முந்திரி மற்றும் திராட்சையை சேர்க்கவேண்டும். முந்திரி, திராட்சை பொரிந்தவுடன் அதனை தனியாக எடுத்து வைக்காமல், அதிலேயே ரவையை கொட்டி வறுக்கவேண்டும். நீண்டநேரம் ரவையை வறுக்கக்கூடாது. பொன் நிறம் வந்தவுடன் எடுத்துவிடவேண்டும். அதன்பிறகு சர்க்கரை பாகு காய்ச்ச வேண்டும். அரைகிலோ சர்க்கரை என்றால் அதில் முக்கால் பங்கு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் ரவா லட்டுக்கு பாகு கெட்டியாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். ஒருவேளை சர்க்கரையில் அழுக்கு இருந்தால் பாகு கொதிக்கும்போது அதில் கொஞ்சம் பால்சேர்த்து கொள்ளுங்கள். அப்போது அழுக்கு முழுவதும் மேலே வந்துவிடும். அதனை நாம் எடுத்துவிட்டால் பாகு சுத்தமாகிவிடும். பின்னர் குலாப் ஜாமுனுக்கு எப்படி பாகு பதம் எடுப்போமோ, அதைவிட கொஞ்சம் கெட்டியாக வரும்வரை பாகை கொதிக்கவைக்க வேண்டும். பாகு, பதத்திற்கு வந்தபின் அதனை இறக்கி, வறுத்து வைத்துள்ள ரவையில் ஊற்றி கிளறிவிட வேண்டும். பாகை முழுவதும் ஊற்றியபின் அதில் ஏலக்காய் தூளை சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த கலவையை லட்டு வடிவத்தில் பிடிக்கவேண்டும். பாகு சூடாக இருக்கும்வரை லட்டு பிடிக்கக்கூடாது. சூடாக லட்டு பிடித்தால், ஆறியவுடன் அது கடினமாகிவிடும். அதற்காக மிகவும் ஆறவிட்டும் லட்டு பிடிக்கக்கூடாது. மிதமான சூட்டில் ரவை லட்டுவை பிடிக்கவேண்டும். அவ்வளவுதான் எளிமையான ரவா லட்டு ரெடி. இதனை தாராளமாக 10 - 15 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
- முட்டை சேர்க்காமல் செய்யும் ரவா கேக்
- குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ரவையை வைத்து குழந்தைகளுக்கு பல ஈவ்னிங் ஸ்நாக்குகளை தயார் செய்யலாம். அந்த வகையில் ஓவன் இல்லாமல் ரவையை வைத்து முட்டை சேர்க்காமல், எப்படி சுலபமான முறையில் கேக் செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ரவை- 2 கப்
சர்க்கரை- ஒரு கப்
தயிர்- 3 கரண்டி
பால்- ஒரு லிட்டர்
எண்ணெய்- 3 ஸ்பூன்
டூட்டி புரூட்டி- 3 ஸ்பூன்
ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்
பேக்கிங் பவுடர்- அரை ஸ்பூன்
பேக்கிங் சோடா- கால் டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
ரவையை மிக்சி ஜாரில் பொடித்து எடுத்து சலித்து வைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய், தயிர் மற்றும் சர்க்கரை ஆகியவை சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும். அதில் பொடித்த ரவை மற்றும் பால் சிறுகச்சிறுக கலந்து தோசை மாவு பதத்திற்கு கலந்து அந்த கலவையை 10 நிமிடத்திற்கு மூடி வைக்க வேண்டும்.
இதன்பிறகு இந்த கலவையில் ஏலக்காய் தூள், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து கலக்கி அந்த கலவை கட்டியாக இருந்தால் அதில் பால் சேர்த்து கலந்து அதில் டூட்டி புரூட்டியை சேர்த்து இதனை ஒரு கேக் செய்யும் பாத்திரத்தின் உள்ளே வெண்ணெய் தடவி அதனுள் பட்டர் பேப்பர் வைத்து அதில் இந்த கேக் கலவையை ஊற்ற வேண்டும்.
அதன்பிறகு ஒரு அடிகனமான பாத்திரத்தின் உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடம் ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். பின்னர் கேக் கலவையை அதனுள் வைத்து ஆவி வெளியே போகாத அளவிற்கு பாத்திரத்தை நன்றாக முட வேண்டும் 15 நிமிடங்கள் கழித்து அதனை திறந்து பார்க்கவும். அதில் ஒரு குச்சியை வைத்து குத்தி பார்த்தால் குச்சியில் அந்த கலவை ஒட்டாமல் வந்தால் கேக் நன்றாக வந்துள்ளது என்று அர்த்தம். சுவையான ரவா கேக் தயார்.
அந்த கேக்கை ஒரு வட்ட வடிமான பிளேட்டில் போட்டு அதனை கேக் வடிவத்தில் கட் செய்து எடுத்து சூடு ஆறியதும் பரிமாறவும். இந்த கேக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். முட்டை சேர்க்காமல் மிகவும் மிருதுவான ரவா கேக் செய்ய வேண்டுமா முயற்சி செய்து பாருங்கள்.






