search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷாஜகான் ஷேக்"

    • ஷாஜகான் ஷேக் பெண்களில் சொத்துகளை அபகரித்ததாகவும், பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு.
    • அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர் பெண்களில் சொத்துகளை அபகரித்ததாகவும், பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    ஆனால் மேற்கு வங்காள மாநில போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பெண்கள் ஆயுதங்களுடன் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால் இந்த விசயம் பூதாகரமாக வெடித்தது. இதனால் ஷாஜகான் ஷேக் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    தலைமறைவான அவரை மேற்கு வங்காள போலீசார் கைது செய்தனர். சந்தேஷ்காலி விவகாரத்தில் கைது செய்யவில்லை. ஜனவரி மாதம் சோதனை நடத்த சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவித்தது.

    சந்தேஷ்காலி தொடர்பான குற்றச்சாட்டை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி மேற்கு வங்காள மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், அடுத்த விசாரணையின்போது இது தொடர்பான முழு விவரத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என சிபிஐ-யை கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மே 2-ந்தேதிக்கு ஒத்த்தி வைத்தனர். இன்றைய தினம் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேற்கு வங்காள மாநில அரசு சிபிஐ-க்கு தேவையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

    ×