search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண்மை பட்ஜெட்"

    • திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி கரும்பு டன்னுக்கு ரூ.4000, நெல் டன்னுக்கு ரூ. 2,500 குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
    • விளை பொருட்களில் 40 சதவீதம் மட்டுமே அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது.

     பல்லடம் :

    வேளாண்மை பட்ஜெட்டில் அறிவிப்புகள் மட்டுமே உள்ளன எனகட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செயல் தலைவர் வெற்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    வேளாண்மை பட்ஜெட்,அறிவிப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பலனடைய கூடிய திட்டங்கள் எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை. உதாரணமாக திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி கரும்பு டன்னுக்கு ரூ.4000, நெல் டன்னுக்கு ரூ. 2,500 குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. கரும்பு டன் ஒன்றுக்கு மத்திய அரசின் ரூ.2821 தொகையுடன் கூடுதலாக ரூ.195 வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்துள்ளனர்.

    விவசாயிகள் கரும்புக்கு ரூ.4000 கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். மேலும் கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு, தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை தொகையை பெற்றுத்தர என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறவில்லை. மேலும் நெல் கொள்முதல் அளவை அதிகரிப்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களில் 40 சதவீதம் மட்டுமே அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ளவை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்கப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்ய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. மேலும் நெல் கொள்முதல் நிலையங்கள் சரியாக பராமரிக்கப்படாமால், திறந்த வெளியில் வைக்கப்பட்ட விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாழாவதைத் தடுக்கவும் வழிமுறைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை.மொத்தத்தில் இந்த வேளாண்மை பட்ஜெட் அறிவிப்பு அலங்காரமாக தான் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசின் வேளாண்மை பட்ஜெட்,தேர்தல் அறிக்கை போல பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.14 ஆயிரம் கோடி பயிர்கடன், ரூ.1,500 கோடி வட்டிக்கடன், 77 லட்சம் பனங்கன்றுகள் 15 லட்சம் தென்னங்கன்றுகள், தரிசு நில மேம்பாட்டு, சிறுதானிய இயக்கம், ராமநாதபுரத்தில் மிளகாய் மண்டலம் கோவையில் கறிவேப்பிலை மண்டலம் என பல்வேறு அறிவிப்புகள் உள்ளது.ஆனால் விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்த கரும்பு டன்னுக்கு ரூ.4000, நெல் ரூ. 2,500, உள்ளிட்ட அறிவிப்புகள் எதுவும் வராதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும் கரும்பு விவசாயிகளுக்கு, கரும்பாலைகள் தரவேண்டிய ரூ. ஆயிரம் கோடிக்கும் மேலான நிலுவைத் தொகை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. தக்காளி, வெங்காயம் உற்பத்திக்கு 29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தக்காளியும், வெங்காயமும், விளைவித்த விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல், கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் ரோட்டில் கொட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் தக்காளியை மதிப்பு கூட்டி ஜாம், உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க எந்த திட்டமும் இல்லை. அதே போல, குளிர் பதன கிடங்குகள் அமைப்பது குறித்தும் தகவல் இல்லை. உழவர் நலத்துறை என பெயர் மட்டும் வைத்துள்ளார்கள். ஆனால் உழவர்களுக்கு, விவசாய விளை பொருட்களுக்கு காப்பீட்டு திட்டங்கள் போன்ற அறிவிப்புகள் இல்லை. ஆக மொத்தத்தில் இந்த வேளாண்மை பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையே தருகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×