search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்"

    • சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் 8 - ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
    • அதிகபட்ச மானியத்தொகை ரூ.2.5 லட்சம் வரை வழங்கப் படும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்து உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்களில் தொழில் தொடங்கிட விழை வோரை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசால் புதியதாக அறிவிக்கப்பட்டு மாவட்டத் தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் புலம்பெயர்ந்தோர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி பெறுவதற்கு, மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தேவை யான தகுதிகள் குறித்த விரிவான விவரம் பின்வருமாறு:-

    பொதுப் பிரிவினர் - 18 வயது முதல் 45 வயது வரை, சிறப்புப் பிரிவினர் - 18 வயது முதல் 55 வயது வரை சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் கல்வித் தகுதி 8 - ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். சேவை மற்றும் வணிகம் துறை சார்ந்த தொழில் களுக்கு குறைந்தபட்சம் - 5 லட்சம், உற்பத்தித் துறைக்கு அதிகபட்சம் - ரூ.15 லட்சமும், வேலைவாய்ப்பு விசாவுடன் 2 ஆண்டுகளுக்கு குறையாமல் வெளிநாட்டில் வேலை பார்த்திருக்க வேண்டும். 01. 01. 2020 அல்லது அதற்கு பிறகு வெளிநாட்டி லிருந்து தமிழகம் திரும்பிய வராக இருத்தல் வேண்டும். கடவுச் சீட்டு வழி முறை, விசா நகல் , கல்விச் சான்று, இருப்பிடச் சான்று, சாதிச் சான்று மாற்றுத் திறனாளிகளுக்கான சான்று ஆகியவற்றின் நகல்கள் இணைத்து வழங்க வேண்டும்.

    இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தொழில் துவங்கும் தொழில் முனைவோர்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அரசு மானியமாக (அதிகபட்ச மானியத்தொகை ரூ.2.5 லட்சம் வரை) வழங்கப் படும். மானியத்தொகை 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்ட பின்னர் கடன் தொகையில் சரி கட்டப்படும். எனவே, கொரோனா பெருந்தொற்று பரவலால் வெளிநாட்டில் வேலை யிழந்து தமிழகம் திரும்பிய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தொழில் தொடங்கி இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    ×