search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளியிடு"

    • சேலம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படது. தொடர்ந்து 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டு படிவங்கள் கடந்த 8-ந்தேதி வரை வரை பெறப்பட்டன.
    • அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்து வருகிற ஜனவரி 5-ந்தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடும் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    சேலம்:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படது. தொடர்ந்து 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டு படிவங்கள் கடந்த 8-ந்தேதி வரை வரை பெறப்பட்டன.

    அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்து வருகிற ஜனவரி 5-ந்தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடும் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் பணிக்காக நியமிக்கப்பட்ட மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா, மாவட்ட கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், அனைத்து உதவி பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் ஆகியோ ருடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்துக்காக பெறப்பட்ட படிவங்கள் குறித்தும், களப்பணி குறித்தும், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் மேல்த ணிக்கை செய்யப்பட்ட சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான படிவங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இந்த படிவங்கள் இறுதி செய்யப்பட்டு பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்கள் விஷ்ணு வர்த்தினி, சரண்யா,

    சவும்யா, தணிகாஜலம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சரவணன், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்களார் பதிவு அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×