search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெல்லம்"

    • உற்பத்தியாகும் வெல்லத்துக்கு முன்பு கேரளாவில் நல்ல ‘கிராக்கி’ இருந்தது.
    • கூடுதல் வரி விதிப்பை தவிர்த்தால் பயனுள்ளதாக இருக்கும்.

    மடத்துக்குளம்:

    உடுமலை ஏழு குள பாசனப்பகுதிகளில்கரும்பு சாகுபடி பிரதானமாக உள்ளது.இங்குள்ள விவசாயிகள், விளைநிலங்களில் ஆலை அமைத்து, வெல்லம் உற்பத்தியில் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனர். சிலர் ஒப்பந்த அடிப்படையில் வெல்லம் உற்பத்திக்கு கரும்பு விற்பனை செய்கின்றனர். இங்கு உற்பத்தியாகும் வெல்லத்துக்கு முன்பு கேரளாவில் நல்ல 'கிராக்கி' இருந்தது.

    குறிப்பாக ஓணம் சீசனை இலக்காக வைத்து ஏழு குள பாசனப்பகுதி மற்றும் அமராவதி பாசனப்பகுதிகளில், வெல்லம் உற்பத்தி செய்வது வழக்கம்.பல்வேறு காரணங்களால் கேரளாவில், தமிழகத்தில் உற்பத்தியாகும் வெல்லத்துக்கு வரவேற்பு குறைந்தது.ஓணம் சீசனிலும், அம்மாநில வியாபாரிகள் கொள்முதலுக்கு ஆர்வம் காட்டவில்லை.இவ்வாறு தொடர் பாதிப்பு ஏற்பட்டாலும், உற்பத்தியை முழுமையாக கைவிட முடியாத நிலை விவசாயிகளுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் உள்ளது.

    தற்போதைய சீசனில் 30 கிலோ கொண்ட வெல்ல சிப்பம் 1,140 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

    இது குறித்து வெல்லம் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: -

    வெல்லத்துக்கான உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. கரும்பு சாறு எடுத்தல், பாகு தயாரித்தல் பணிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.கரும்பு வெட்டும் பணிக்கும் பிற மாவட்டங்களில், இருந்து ஆட்களை அழைத்து வருகிறோம். இதனால் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் விலை அதிகரிக்காமல், குறைந்து வருகிறது.பிற பகுதிகளுக்கு விற்பனைக்காக வெல்லத்தை எடுத்துச்செல்லும் போது வரி விதிக்கப்படுகிறது. இத்தொழிலை காப்பாற்ற வெல்லத்துக்கு ஆதார விலை நிர்ணயித்து ரேஷன் கடைகள் வாயிலாக விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் வரி விதிப்பை தவிர்த்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர். 

    • மாரப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.
    • நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம்ரூ 1,220க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,220 விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே அண்ணா நகர், சேளூர், செல்லப்பம்பா ளையம், சாணார்பாளையம், பிலிக்கல்பாளையம், பெரிய மருதூர் ,சின்ன மருதூர் ,ஆனங்கூர், அய்யம்பாளையம், வடகரை–யாத்தூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், சோழசிராமணி, சிறு–நெல்லிகோவில்,தி. கவுண்டம்பாளையம், திடுமல், கபிலக்குறிச்சி, மாரப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். கரும்பை வெட்டி செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர்.

    பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர்.வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் தயாரிக்கின்றனர் .பின்னர் வெல்லங்களைநன்கு உலர வைத்து 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயார் செய்கின்றனர்.தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம ஏல சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர் .வெல்ல சிப்பங்களை வாங்கிச் செல்வதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெல்ல சிப்பங்களை வாங்கி லாரிகள் மூலம் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர் .

    கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ1,135க்கும், அச்சுவெல்லம் ரூ1,110 க்கும் விற்பனையானது. நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம்ரூ 1,220க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,220 விற்பனையானது.கரும்பு ஒரு டன் ரூ2,300 வரை விற்பனையாகிறது. உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ள தாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×