search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீழ்ச்சி"

    • பரமத்திவேலூர் பகுதிகளில் உற்பத்தி அதிகரிப்பால் வாழைத்தாரின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
    • மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு ,கரூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை தவிர தினந்தோறும் நடைபெறும் வாழைத்தார் ஏல சந்தைக்கு வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.250-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.250-க்கும்,கற்பூரவள்ளி வாழைத்தார் தார் ஒன்று ரூ.300-க்கும் மொந்தன் காய் ஒன்று ரூ.5-க்கும் விற்பனையானது.

    சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.250-க்கும்,கற்பூரவள்ளி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.450-க்கும் , மொந்தன் காய் ஒன்று ரூ.6- க்கும் விற்பனையானது.

    தற்போது விசேஷ நிகழ்ச்சிகள் அதிகமாக எதுவும் இல்லாததால் வாழைத்தார்கள் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • நண்டு விலை குறைந்ததால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    • மீன் விலை குறைந்த நிலையிலும் மார்க்கெட்டுக்கு கொண்டு வரும்போது விலை அதிகரித்துள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள களிமண்குண்டு, பெரியபட்டினம், சேதுக்கரை, வேலாயுதபுரம், மாயாகுளம், கீழக்கரை உள்ளிட்ட வட்டாரப் பகுதிகளில்ஏராளமான மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

    சில தினங்களாக மீன்பாடு இல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தற்போது அதிக அளவு மீன் வரத்து உள்ளது. வாடைக் காற்று வீசியதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாலும், சமீபத்தில் பெய்த மழை யாலும் மீனவர்களுக்கு எதிர்பார்த்த மீன்கள் கிடைத்து வருகிறது.

    இதனால் மொத்த வியா பாரிகள் கடற்கரைக்கு படையெடுத்து வருகின்றனர். மீன் விலை குறைந்த நிலையிலும் மார்க்கெட்டுக்கு கொண்டு வரும்போது விலை அதிகரித்துள்ளது.

    குறிப்பாக நண்டு கிலோ ரூ.800-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.300 வரை விற்கப்படுவதால் நண்டு பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், 5 மாதங்கள் நண்டுக்கு அதிகமான கிராக்கி இருந்தது. இத னால் கிலோ ரூ.800 வரை மொத்த விற்பனையாளர்கள் வாங்கி சென்றனர். தற்போது பல்வேறு பகுதிகளிலும் நண்டு பாடு அதிகம் இருப்ப தால் மொத்த வியாபாரிகள் ரூ.250 முதல் 300 வரை கொள்முதல் செய்கின்றனர். இதனால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சில மீனவர்கள் மொத்த வியாபாரிகள் எடுக்கும் விலையை விட அதிகமான விலைக்கு விற்பனை செய்யலாம் என்ற நோக்கத்தில் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். மார்க்கெட்டிற்கு தற்போது நண்டு வரத்து அதிகரித்துள்ளது. கிலோ ரூ.300 முதல் 400 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

    பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பூக்கள் விலை திடீரென வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சின்ன மருதூர், பெரிய மருதூர், செல்லப்பம்பாளையம், நகப்பாளையம் ,தண்ணீர் பந்தல், ஜேடர்பாளையம் , கபிலர்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லை பூ, சம்பங்கி, அரளி ,செவ்வந்தி, கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டுவரும் 2 பூக்கள் ஏல மார்க்கெட்டுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    ஏலம் எடுத்த உதிரிப் பூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும் ,தோரணங்களாலும் கட்டி விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ குண்டுமல்லிகை பூ ரூ.850- க்கும்,சம்பங்கி கிலோ ரூ.120- க்கும், அரளி கிலோ ரூ.130- க்கும், ரோஜா கிலோ ரூ.200- க்கும், முல்லைப் பூ ரூ.650- க்கும், செவ்வந்திப்பூ ரூ.280- க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும் விற்பனையானது.

    நேற்று நடைபெற்ற ஏல‌த்தில் குண்டு மல்லிகை பூ கிலோ ரூ400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50- க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.160- முல்லைப் பூ கிலோ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200- க்கும், கனகாம்பரம் ரூ.300-க்கும் விற்பனையானது. விலை திடீரென வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ×