search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்"

    • சுவர் இடிந்து விழும்போது குழந்தைசாமி வீட்டில் இல்லாததால் உயிர் தப்பினார்.
    • குளங்கள், தாழ்வான பகுதிகள், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் பகுதியில் கடந்த வாரம் தொடர்ந்து கனமழை பெய்தது இதனால் எங்கு பார்த்தாலும் மழை நீர் தேங்கி நின்றது. குளங்கள், தாழ்வான பகுதிகள், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது.

    கடந்த வாரம் பெய்த தொடர் மழையின் காரணமாக வெள்ளகோவில் நகராட்சி 16 வது வார்டு, அழகாபுரி நகரில் வட்டமலை விநாயகர் கோவில் எதிரில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான பழைய வீடு உள்ளது. இந்த வீட்டில் குழந்தைசாமி என்பவர் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை மழை நீர் தேங்கியதால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.சுவர் இடிந்து விழும்போது குழந்தைசாமி வீட்டில் இல்லாததால் உயிர் தப்பினார். வீட்டில் இருந்த அவரது உடமைகள் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதம் அடைந்தன. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மழைக் காலங்களில் வீட்டின் உள்ளே நீர் புகுந்து எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் தங்கள் குழந்தைகளை இறுக்கி கட்டி அணைத்த படி அச்சத்துடன் இரவு முழுவதும் கண்விழித்து உறங்காமல் காவல் காக்கும் நிலையில் உள்ளனர்.
    • எனவே அதிகாரிகள் புதிய குடியிருப்பு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது சிரக்காடு. மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் பல்வேறு இடங்களில் மலைபகுதிகளில் வாழ்ந்து வந்தவர்களை ஒருங்கிணைத்து கடந்த 2011-ம் ஆண்டு இந்திரா காந்தி வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டித் தரப்பட்டு சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

    அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சிரக்காட்டு பகுதியில் உள்ள ஆதி பழங்குடியின மக்கள் ஆடு, மாடு, கோழி வளர்த்தல், தோட்டக்கூலி விவசாயக் கூலி வேலைகளுக்கு செல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போடி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே இவர்கள் வசித்து வரும் வீடுகளில் மேற்கூரைகள் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. குடியிருப்பிற்கு அருகிலேயே நகராட்சியின் யூனியன் குப்பை சேகரிப்பு மையம் உள்ளதால் கொசுக்கள், ஈக்கள் மற்றும் விஷ ஜந்துக்கள் தொந்தரவு அதிகம் உள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயமும் அதிகம் உள்ளது.

    இவர்களுக்கு இங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் மாற்று குடியிருப்பு வசதி செய்து தருவதாக கூறி இதுவரை அணைக்கரைப்பட்டி ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இப்பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர்.

    குடியிருக்கும் வீடுகள் மேற்கூரைகள், சுற்றுச்சுவர் விரிசல் ஏற்பட்டு மழைக் காலங்களில் வீட்டின் உள்ளே நீர் புகுந்து எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் தங்கள் குழந்தைகளை இறுக்கி கட்டி அணைத்த படி அச்சத்துடன் இரவு முழுவதும் கண்விழித்து உறங்காமல் காவல் காக்கும் நிலையில் தாங்கள் உள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் புதிய குடியிருப்பு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×