search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவிஐபிக்கள்"

    வி.வி.ஐ.பி.க்களுக்கு வாடகை விமானம் வழங்கியதில் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு 1147 கோடி ரூபாய்க்கு பாக்கி வைத்துள்ளது என தகவல் அறியும் சட்டத்தில் தெரிய வந்துள்ளது. #AirIndia #VVIPCharter
    புதுடெல்லி:

    இந்தியாவில் ஜனாதிபதி. பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதி, பாதுகாப்பு துறை மந்திரி உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்கள் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். இதற்காக ஏர் இந்தியா சார்பில் விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதற்கான கட்டணத்தை மத்திய அரசு செலுத்தி விடுவது வழக்கம்.

    ஆனால், வி.வி.ஐ.பி.க்களுக்கு வாடகை விமானம் வழங்கியதில் கட்டண பாக்கி வைத்துள்ள விவகாரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளிவந்தது.

    இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற ராணுவ கமாண்டர் லோகேஷ் பத்ரா எழுப்பிய கேள்விக்கு ஏர் இந்தியா பதில் அளித்துள்ளது.

    இந்நிலையில், வி.வி.ஐ.பி.க்களுக்கு வாடகை விமானம் வழங்கியதில் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு வைத்துள்ள வாடகை பாக்கி 1147 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது தகவல் அறியும் சட்டத்தில் தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    பாதுகாப்பு துறை சார்பில் 211 கோடி ரூபாயும், வெளியுறவு துறை சர்பில் 392 கோடி ரூபாயும், பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய மந்திரிசபை செயலாளர்கள் துறை சார்பில் 543 கோடி ரூபாயும் என மொத்தம் 1147 கோடி ரூபாய் வாடகை கட்டணம் பாக்கி வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

    கடந்த மார்ச் மாதம் ஏர் இந்தியாவுக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கி கட்டணம் 325 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. #AirIndia #VVIPCharter
    ×