search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகளுக்கு மானியம்"

    • நிதிப் பற்றாக்குறை காரணமாக பல விவசாயிகள் பந்தல் சாகுபடி முறைக்கு மாறுவதில் சிரமம் உள்ளது.
    • பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

    திருப்பூர்:

    பீா்க்கங்காய், புடலங்காய், பாகற்காய், சுரைக்காய் போன்ற கொடிக் காய்கறிகளை பந்தல் அமைத்து சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும். மேலும் காய் நீளமாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.

    நிதிப் பற்றாக்குறை காரணமாக பல விவசாயிகள் பந்தல் சாகுபடி முறைக்கு மாறுவதில் சிரமம் உள்ளது. விவசாயிகளின் சிரமத்தை போக்கும் வகையில் தோட்டக்கலை சாா்பில் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பந்தல் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

    இது குறித்து பொங்கலூர் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ஷா்மிளா கூறியதாவது:-

    பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், எப்.எம்.பி. வரைபடம், கிராம நிா்வாக அலுவலா் சான்று, ஆதாா், குடும்ப அட்டை நகல், வங்கி புத்தக நகல் ஆகியவற்றுடன் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம். மேலும், விவரங்களுக்கு 7708330870, 9095628657, 89392 63412 ஆகிய செல்போன் எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்தாா்.

    • கால்நடைகளுக்கான தீவனப் பற்றாக்குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • புல் அறுவடை செய்தல் மற்றும் புல் நறுக்கும் இயந்திரங்கள் மற்றும் டிராக்டர் போன்றவை வாங்க ஒரு விவசாயிக்கு 25 சதவீத மானியம் அல்லது ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

    திருச்சி :

    திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    திருச்சி மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கான தீவனப் பற்றாக்குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தில் பசுந்தீவன உற்பத்தியை பெருக்குவதற்காக விவசாயிகளுக்கு 25 சதவீதம் மானிய விலையில் பண்ணை கருவிகளை வழங்கி, அவர்களை தொழில்முனைவோராக உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    இத்திட்டத்தில் ஆண்டுக்கு 3,200 மெட்ரிக் டன் அதற்கு மேலாக ஊறுகாய் புல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, புல் அறுவடை செய்தல் மற்றும் புல் நறுக்கும் இயந்திரங்கள் மற்றும் டிராக்டர் போன்றவை வாங்க ஒரு விவசாயிக்கு 25 சதவீத மானியம் அல்லது ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

    மேலும், இத்திட்டத்தில் சேர்ந்து தொழில் முனைவோராக விரும்பும் விவசாயிகள், தனி நபர் , பால் பண்ணையாளர்கள் , பால் உற்பத்தியாளர்கள் , கால்நடை வளர்ப்போர்கள் , கிராமப்புற இளைஞர்கள், சுய உதவிக்குழுக்கள் வருகிற 26ஆம் தேதிக்குள் அவரவர் கிராமத்துக்கு உள்பட்ட அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விபரங்கள் தெரிந்து விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு மானியம்.
    • 800 ஹெக்டர் இலக்கு நிர்ணயம் தரிசாக இருக்கும் நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவர இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டத்தில் 2022-2023-ம் நிதியாண்டில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்கான 800 ஹெக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.1.17 கோடி மானியம் வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் சாகுபடி செய்யாமல் தரிசாக இருக்கும் நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவர இத்திட்டத்தை விவசாயிகள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள் ளப்படுகிறார்கள். இத்திட்டத்தின் கீழ் தரிசாக இருக்கும் நிலங்களில் உள்ள முட்புதர்களை அகற்றவும் மேலும் அவற்றை சாகுபடிக்கு கொண்டு வந்து சிறுதானியங்கள், பயிறு வகைகள், விதைத்து அதை விளை நிலங்களாக மாற்ற ஒரு ஹெக்டருக்கு ரூபாய் 13 ஆயிரத்து 500 மானியமும் நிலக்கடலை பயிருக்கு 22 ஆயிரத்து 900 மானியமும் வழங்கப்படுகிறது.

    தரிசு நிலங்களில் உள்ள முட்புதர்களை அகற்றுவதற்கும், நிலத்தை சமன் செய்வதற்கும், உழவு பணி மேற்கொள்வதற்கும், மற்றும் விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவைகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் விவசாயிகளுக்கு ஒரு நல்ல திட்டம் ஆகும். சாகுபடி மேற்கொள்ளப்படாமல் பயன்பாடற்று கிடக்கும் தங்கள் நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவர விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி இத்திட்டத்தில் பயன்பெற முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

    • கொடைக்கானல் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறிகள், பழங்கள், மலர்கள் சாகுபடி செய்ய மானியத்துடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • தேர்வு செய்யப்பட்டு திட்டங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என கொடைக்கானல் தோட்டக்கலை துணை இயக்குனர் தெரிவித்து ள்ளார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வட்டாரத்தில் ேதாட்டக்கலைத்துறை மூலம் காய்கறிகள், பழங்கள், மலர்கள் சாகுபடி செய்ய மானியத்துடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2022-2023 தேசிய ேதாட்டக்கலை இயக்க திட்டத்தின்கீழ் வீரிய உயர் ரக காய்கறி விதைகள் பரப்பு விரிவாக்கத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் மானியம், அவக்கோடா கன்றுகள் ஒரு ஏக்கருக்கு ரூ.5,760 மானியம் வழங்கப்பட உள்ளது. மிளகு சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வீதம் நாற்றுகளுடன் கூடிய மானியம் வழங்கப்பட உள்ளது.

    மேலும் புதிதாக எலுமிச்சை, டிராகன்பழம், ஸ்டாபரி போன்ற பழ வகைகளின் உற்பத்தியை அதிரிக்க மானியம் வழங்கப்பட உள்ளது.

    பசுமை குடில் அமைத்து கொய்மலர் மற்றும் காய்கறி சாகுபடி செய்ய 1000 சதுர மீட்டருக்கு ரூ.4,67500 மானியம் வழங்கப்பட உள்ளது. பண்ணைக்குட்டை அமைத்திட ரூ.75 ஆயிரம் மானியமும், தேனீ வளர்ப்பதை ஊக்குவிக்க தேனீ வளர்ப்பு பெட்டிகளும் மானியத்தில் வினியோகி க்கப்பட உள்ளது.

    மேலும் சிப்பம் கட்டும் அறை ஒன்றுக்கு ரூ.2 லட்சமும், நிரந்தர மண்புழு கூடாரம் அமைக்க ஒரு எண்ணுக்கு ரூ.50 ஆயிரமும் மானியமாக வழங்கப்பட உள்ளது.

    பூண்டு, பழ பயிர் சாகுபடி மற்றும் பாரம்பரிய காய்கறிகள் பயிரிட ஒரு ஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும். மேலும் நிரந்தர பந்தல் அமைத்து காய்கறி பயிர் சாகுபடி செய்ய ஒரு ஹெக்டருக்கு ரூ.2 லட்சம் வரை மானியமும் விவசாய முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்த இன கவர்ச்சி பொறி மற்றும் மஞ்சள் ஒட்டுப்பொறி ஆகியவை மானியத்தில் வழங்கப்படும்.

    விவசாயிகள் உழவன் செயலி மூலமாக பதிவு செய்து கொண்டும் முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்தும் தங்களது சிட்டா, அடங்கல், ரேசன் கார்டு, ஆதார் கார்டு நகல், புகைப்படம் 2, வங்கி கணக்கு முதல்பக்க நகல் ஆகியவற்றை சமர்ப்பித்தால் முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு திட்டங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என கொடைக்கானல் தோட்டக்கலை துணை இயக்குனர் தெரிவித்து ள்ளார்.

    ×