search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பந்தல் காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம்
    X

    கோப்புபடம்

    பந்தல் காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம்

    • நிதிப் பற்றாக்குறை காரணமாக பல விவசாயிகள் பந்தல் சாகுபடி முறைக்கு மாறுவதில் சிரமம் உள்ளது.
    • பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

    திருப்பூர்:

    பீா்க்கங்காய், புடலங்காய், பாகற்காய், சுரைக்காய் போன்ற கொடிக் காய்கறிகளை பந்தல் அமைத்து சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும். மேலும் காய் நீளமாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.

    நிதிப் பற்றாக்குறை காரணமாக பல விவசாயிகள் பந்தல் சாகுபடி முறைக்கு மாறுவதில் சிரமம் உள்ளது. விவசாயிகளின் சிரமத்தை போக்கும் வகையில் தோட்டக்கலை சாா்பில் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பந்தல் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

    இது குறித்து பொங்கலூர் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ஷா்மிளா கூறியதாவது:-

    பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், எப்.எம்.பி. வரைபடம், கிராம நிா்வாக அலுவலா் சான்று, ஆதாா், குடும்ப அட்டை நகல், வங்கி புத்தக நகல் ஆகியவற்றுடன் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம். மேலும், விவரங்களுக்கு 7708330870, 9095628657, 89392 63412 ஆகிய செல்போன் எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்தாா்.

    Next Story
    ×