search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாய நிலத்திற்குள்"

    • மாடுகள் கந்தவேலின் தோட்டத்திற்குள் புகுந்து வாழை மற்றும் மக்காச்சோள பயிர்களை கடித்து சேதப்படுத்தியது.
    • இந்த மாடுகளை வளர்க்கும் நபர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் வந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே மைக்கேல் பாளையம் ஊராட்சி பாலகுட்டை பகுதியை சேர்ந்தவர் கந்தவேல் (50). விவசாயி. இவருக்கு 8 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்டவைகளை பயிரிட்டுள்ளார்.

    இந்த நிலையில் பாலக்குட்டையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிணத்தடி மலை அடிவார பகுதி பகுதியில் இருந்து இரவு 10-க்கும் மேற்பட்ட மலை மாடுகள் ராசு என்பவரது தோட்டத்தில் நள்ளிரவில் புகுந்த கூட்டத்தை பார்த்த அவரது வளர்ப்பு நாய்கள் குறைத்தன. இதனை பார்த்து வெளியே வந்த ராசு அந்த மலை மாடுகளை அங்கிருந்து விரட்டி விட்டார்.

    பின்னர் அங்கு இருந்து சென்ற மாடுகள் கந்தவேலின் தோட்டத்திற்குள் புகுந்து வாழை மற்றும் மக்காச்சோள பயிர்களை கடித்து சேதப்படுத்தியது.

    உடனடியாக ராசு மற்றும் கந்தவேல் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் உதவியோடு அந்த மாடுகளை விரட்டி கந்தவேலின் தோட்டத்தில் கட்டி வைக்கப் பட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் இந்த மாடுகளை வளர்க்கும் நபர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் வந்தனர்.

    அவர்களிடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி இனிமேல் இவ்வாறு மாடுகளை இரவு நேரத்தில் பாதுகாப்பாக பட்டியல் கட்டி வைக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

    ×