search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழுந்து"

    • சேலம் மாவட்டத்தில் தந்தையின் இறுதி சடங்கிற்கு செல்லமுடியாததால் விரக்தியில் மது குடித்த வாலிபர் குட்டையில் தவறி விழுந்து பலியானார்.
    • வெங்கடேஷ் லாரிக்கு வடமாநிலம் சென்று விட்ட நிலையில் அவரால் தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள பவளத்தானுர் ரவுண்டானா அருகில் குட்டையில் ஆண் பிணம் கிடப்பதாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தாரமங்கலம் போலீசார் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இறந்தவர் கொங்கணாபுரம் அருகிலுள்ள அத்தியப்பனுர் பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகன் வெங்கடேஷ் (வயது36) லாரி டிரைவர் என்பது தெரியவந்தது. வெங்கடேஷின் தந்தை முத்து கடந்த 15 நாட்களுக்கு முன்னர் இறந்து விட்டார் . அந்த வேளையில் வெங்கடேஷ் லாரிக்கு வடமாநிலம் சென்று விட்ட நிலையில் அவரால் தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.

    பின்னர் தனது வீட்டிற்கு செல்லும் போது பவளத்தானுர் ரவுண்டானா பகுதியில் உள்ள பாலத்தின் மீது அமர்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார் .மதுபோதை அதிகமாக மயங்கி குட்டையில் விழுந்தவர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது .

    இதுபற்றி வெங்கடேஷின் தாயார் பாவாய் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குடிபோதையில் பாலத்தில் அமர்ந்திருந்த வாலிபர் பள்ளத்தில் தவறி விழுந்து பலியானார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள சின்னமருதூரைச் சேர்ந்தவர் மணி.இவரது மகன் பாபு(33) கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2-ந் தேதி மது அருந்தி விட்டு சின்னமருதூரில் உள்ள ஒரு பாலத்தின் மீது அமர்திருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின் பின்னால் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்தார்.இதில் அவருக்கு தலை மற்றும் கழுத்து ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கலில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு‌ சிகிச்சை பெற்று வந்த பாபு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×