குட்டையில் தவறி விழுந்து சாவு

சேலம் மாவட்டத்தில் தந்தையின் இறுதி சடங்கிற்கு செல்லமுடியாததால் விரக்தியில் மது குடித்த வாலிபர் குட்டையில் தவறி விழுந்து பலியானார்.வெங்கடேஷ் லாரிக்கு வடமாநிலம் சென்று விட்ட நிலையில் அவரால் தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.
குட்டையில் தவறி விழுந்து சாவு
Published on

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள பவளத்தானுர் ரவுண்டானா அருகில் குட்டையில் ஆண் பிணம் கிடப்பதாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தாரமங்கலம் போலீசார் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்தவர் கொங்கணாபுரம் அருகிலுள்ள அத்தியப்பனுர் பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகன் வெங்கடேஷ் (வயது36) லாரி டிரைவர் என்பது தெரியவந்தது. வெங்கடேஷின் தந்தை முத்து கடந்த 15 நாட்களுக்கு முன்னர் இறந்து விட்டார் . அந்த வேளையில் வெங்கடேஷ் லாரிக்கு வடமாநிலம் சென்று விட்ட நிலையில் அவரால் தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.

பின்னர் தனது வீட்டிற்கு செல்லும் போது பவளத்தானுர் ரவுண்டானா பகுதியில் உள்ள பாலத்தின் மீது அமர்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார் .மதுபோதை அதிகமாக மயங்கி குட்டையில் விழுந்தவர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது .

இதுபற்றி வெங்கடேஷின் தாயார் பாவாய் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com