search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்"

    • எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ராமச்சந்திரன், சூர்யபிரகாஷ் மற்றும் மாநில செயலாளர் வி.சி.கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பில் மாமூல் தராத வணிகர் வெட்டிக் கொல்லப்பட்டதை கண்டித்தும், வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற கோரியும் பாதிக்கப்பட்ட வணிகருக்கு ரூ. 1 கோடி நிதியும், குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க கோரியும் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநில தலைவர் அ.முத்துக்குமார் தலைமையில் இன்று எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் கே.சி.ராஜா, பொருளாளர் சி.பொன்னுசாமி, மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.அருண்குமார், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ப.ஜெயபாலன், கமாலுதின், பிரகாஷ், கணேசன், மகாலிங்கம், மெடிக்கல் கண்ணன், எ.பி. துரை, மணி ராஜ், மணிகண்டன், தேங்காய் கடை பாலமுருகன், சுரேஷ், சின்னதுரை, கருணாநிதி, சுப்புராஜ், கருப்பையா, பாலமுருகன், சுப்பிரமணியன், வேல்முருகன், சீனி பாண்டியன், பிரபு, சின்னமணி, ஆண்டனி பீட்டர், இசக்கி கோபால் ராஜா, விஜயராகவன், ராமச்சந்திரன், சூர்யபிரகாஷ் மற்றும் மாநில செயலாளர் வி.சி.கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தலை சுமையாக ஈடுபடும் தொழிலாளர்களை முறையாக கணக்கெடுக்க வேண்டும்.
    • நிகழ்ச்சியில் சி.ஐ டி.யூ., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    உடுமலை :

    சி.ஐ.டி.யு உடுமலை நடைபாதை வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 2014 ஆம் ஆண்டு சாலையோர வியாபாரிகள் ஒழுங்கு சட்டத்தின் முறையை அமல்படுத்த வேண்டும். உடுமலை நகர பகுதியில் வியாபாரம் செய்யும் தள்ளுவண்டிகள், தலை சுமையாக ஈடுபடும் தொழிலாளர்களை முறையாக கணக்கெடுக்க வேண்டும்.

    நடைபாதை வியாபாரிகள் அனைவருக்கும் தள்ளுவண்டி வழங்கிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கியில் கடன் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் ,விற்பனை கூழு கூட்டத்தை குறிப்பிட்ட இடைவெளியில் நடத்த வேண்டும்.

    பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சியில் சி.ஐ டி.யூ., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×