search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்தில்"

    சாலை விபத்தில் வாலிபர் பலினார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையம் அடுத்த தண்ணீர்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு மகன் சுந்தரம் (வயது21). தனியார் நிதி நிறுவன ஊழியரான இவர் இரவு, வாழப்பாடி முத்தம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றார்.

    அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் பின்னால் பலமாக மோதினார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு அக்கம்–பக்கத்தினர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அவரது தந்தை வேலு கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி அருகே சாலையை கடக்க முயன்ற கூலி தொழிலாளி விபத்தில் பலியானார்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த பேளூரைச் சேர்ந்தவர் சிவகுமார் (29). கூலித் தொழிலாளி இவர் நள்ளிரவு இரவு வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்து வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து சிவகுமார் மகன் அஜய் பிரசாத் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×