search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வின்பாஸ்ட்"

    • எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.-க்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்தது.
    • இந்த கார் 200 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் என தகவல்.

    வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தையில் களமிறங்கியது. மேலும் தமிழ்நாட்டில் தனது வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான ஆலையை கட்டமைத்து வருகிறது. இந்த வரிசையில் வின்பால்ட் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனம், VF3 காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.-க்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது.

    புதிய வின்பாஸ்ட் VF3 மாடல் இந்திய சந்தையில் எம்.ஜி. கொமெட் EV மாடலுக்கு போட்டியாக அமைகிறது. தற்போது காப்புரிமை கோரி விண்ணப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், வின்பாஸ்ட் VF3 மாடல் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

     


    அளவீடுகளை பொருத்தவரை வின்பாஸ்ட் VF3 மாடல் 3190mm நீளம், 1678mm அகலம், 1620mm உயரமாக இருக்கிறது. இந்த காரின் பூட் ஸ்பேஸ் (இருக்கையின் பின்புறம் பொருட்களை வைத்துக் கொள்வதற்கான பகுதி) மட்டும் 550 லிட்டர்கள் ஆகும். இந்த காரில் வழங்கப்பட இருக்கும் பேட்டரி பேக் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன.

    எனினும், வின்பாஸ்ட் VF3 எலெக்ட்ரிக் மின் எஸ்.யு.வி. மாடல் முழு சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் வின்பாஸ்ட் VF3 மாடல்- இகோ மற்றும் பிளஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் ஒற்றை மோட்டார் வடிவில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.

    இந்த காரில் 10 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் டிஜிட்டல் கிளஸ்டர், மல்டி ஃபன்ஷன் ஸ்டீரிங் வீல், 2-ஸ்போக் வீல் டிசைன் வழங்கப்படுகிறது. மேலும் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், டூயல் ஏர்பேக், குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது.

    ×