என் மலர்
நீங்கள் தேடியது "Vinfast"
- இவை மணிக்கு 60-99 கிமீ வேகத்தில் இயக்கும் திறன் கொண்டவை.
- பேட்டரி வரம்புகள் மாடலுக்கு மாடல் வேறுபடுகின்றன.
இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு புதுவரவு நிறுவனம் வின்ஃபாஸ்ட். சமீபத்தில் இந்தியாவில் VF 6 மற்றும் VF 7 மின்சார எஸ்.யூ.வி.க்களை அறிமுகப்படுத்திய வின்ஃபாஸ்ட், நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் மின்சார ஸ்கூட்டர் பிரிவிலும் களமிறங்க தயாராகி வருகிறது.
2026 ஆம் ஆண்டில் தனது முதல் மின்சார ஸ்கூட்டரை இங்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. அதன் உலகளாவிய வரிசையில் இருந்து எந்த மாடல்களை உள்ளூர் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள அந்நிறுவனம் ஏற்கனவே ஆய்வு நடத்தியது.
வின்ஃபாஸ்ட் தற்போது ஃபெலிஸ், கிளாரா நியோ, ஈவோ கிராண்ட், வெரோ எக்ஸ், வென்டோ எஸ் மற்றும் தியோன் எஸ் உள்ளிட்ட பல மின்சார ஸ்கூட்டர் மாடல்களை சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்கிறது. இந்த ஸ்கூட்டர்களில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட அல்லது ஹப்-மவுண்டட் மோட்டார்கள் உள்ளன.

இவை மணிக்கு 60-99 கிமீ வேகத்தில் இயக்கும் திறன் கொண்டவை. பேட்டரி வரம்புகள் மாடலுக்கு மாடல் வேறுபடுகின்றன, சுமார் 160 கிமீ வரை செல்லும். இந்த விவரங்கள் வியட்நாமிய சந்தைக்கானவை. இவற்றில் சில இந்தியாவிற்காக மதிப்பீடு செய்யப்படலாம்.
அங்கு இந்த நிறுனம் ஸ்கூட்டரின் அன்றாட பயணத்திற்கு ஏற்ற தன்மை, மாறுபட்ட சாலை நிலைமைகளை சமாளிக்கும் திறன் மற்றும் இந்தியாவின் தட்பவெப்ப நிலைகளின் கீழ் பவர்டிரெய்னின் ஆயுள் ஆகியவற்றை மதிப்பீடு செய்கிறது.
வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் இந்திய வெளியீடு 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை புதிய மாடல்கள் 2026 பண்டிகை காலத்தை குறிவைத்து அறிமுகம் செய்யப்படலாம். இந்தப் பிரிவில் தற்போது டிவிஎஸ், ஏத்தர் எனர்ஜி, பஜாஜ் ஆட்டோவின் செட்டக் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா போன்ற பிரான்டுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
- வி.எப்.7 மாடலை போலவே, எஸ்.யூ.வி. வகையை சேர்ந்தது தான் வி.எப்.6 மாடல்.
- இதில் 59.6 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்கர அளவு, 18 இன்ச் ஆகும்.
வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் உற்பத்தி ஆலை அமைத்து எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. அந்தவகையில், வி.எப்.6 மற்றும் வி.எப். 7 ஆகிய எலெக்ட்ரிக் கார்கள் சந்தையில் அறிமுகமாகி உள்ளன.
வின்பாஸ்ட் வி.எப்.7
வின்பாஸ்ட் நிறுவனத்தின் வி.எப்.7 எலெக்ட்ரிக் கார் 70.8 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி பேக்குடன் சந்தைக்கு வந்திருக்கிறது. 19 இன்ச் சக்கரங்கள், லெவல்-2 ADAS பாதுகாப்பு, வண்ணமயமான ஹெட் அப் டிஸ்பிளே, எல்.இ.டி. விளக்குகள், டியூல் சோன் ஏ.சி., வேகான் லெதர் உள் அலங்காரங்கள், முன்பக்க இருக்கையில் வென்டிலேஷன் வசதி, எட்ஜ் டூ எட்ஜ் பனோரமிக் ரூப் என செயல்திறனிலும், வடிவமைப்பிலும் சிறப்பானதாக, இந்த எலெக்ட்ரிக் காரை தயாரித்துள்ளனர்.

வின்பாஸ்ட் வி.எப்.6
வி.எப்.7 மாடலை போலவே, எஸ்.யூ.வி. வகையை சேர்ந்தது தான் வி.எப்.6 மாடல். இதில் 59.6 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்கர அளவு, 18 இன்ச் ஆகும். இதிலும் லெவல்-2 ADAS பாதுகாப்பு வசதிகள் நிறைந்துள்ளன. இத்துடன் முழுமையாக எல்.இ.டி. லைட்டிங், கனெக்டட் கார் வசதி, ஹெட் அப் டிஸ்பிளே, இருவண்ண உள் அலங்காரம், பரந்து விரிந்த பனோரமிக் ரூப் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளன.
- பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்.
- தமிழ்நாட்டில் 3,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
வியட்நாம் நாட்டின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமாக வின்ஃபாஸ்ட் தமிழ்நாட்டில் ரூ.16000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை கையெழுத்தாகிறது.
தூத்துக்குடியில் அமையவுள்ள இந்த தொழிற்சாலையின் மூலம் தமிழ்நாட்டில் 3,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான @VinFastofficial
தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது.
அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் ஈவிகார் மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை வின்ஃபாஸ்ட் நிறுவனம் அமைக்கவுள்ளது.
இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்.
தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தாருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள்!
#TNGIM2024-இல் இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்!
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.-க்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்தது.
- இந்த கார் 200 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் என தகவல்.
வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தையில் களமிறங்கியது. மேலும் தமிழ்நாட்டில் தனது வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான ஆலையை கட்டமைத்து வருகிறது. இந்த வரிசையில் வின்பால்ட் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனம், VF3 காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.-க்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது.
புதிய வின்பாஸ்ட் VF3 மாடல் இந்திய சந்தையில் எம்.ஜி. கொமெட் EV மாடலுக்கு போட்டியாக அமைகிறது. தற்போது காப்புரிமை கோரி விண்ணப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், வின்பாஸ்ட் VF3 மாடல் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

அளவீடுகளை பொருத்தவரை வின்பாஸ்ட் VF3 மாடல் 3190mm நீளம், 1678mm அகலம், 1620mm உயரமாக இருக்கிறது. இந்த காரின் பூட் ஸ்பேஸ் (இருக்கையின் பின்புறம் பொருட்களை வைத்துக் கொள்வதற்கான பகுதி) மட்டும் 550 லிட்டர்கள் ஆகும். இந்த காரில் வழங்கப்பட இருக்கும் பேட்டரி பேக் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன.
எனினும், வின்பாஸ்ட் VF3 எலெக்ட்ரிக் மின் எஸ்.யு.வி. மாடல் முழு சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் வின்பாஸ்ட் VF3 மாடல்- இகோ மற்றும் பிளஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் ஒற்றை மோட்டார் வடிவில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.
இந்த காரில் 10 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் டிஜிட்டல் கிளஸ்டர், மல்டி ஃபன்ஷன் ஸ்டீரிங் வீல், 2-ஸ்போக் வீல் டிசைன் வழங்கப்படுகிறது. மேலும் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், டூயல் ஏர்பேக், குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது.






