search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "world investors summit 2024"

    • பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்.
    • தமிழ்நாட்டில் 3,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    வியட்நாம் நாட்டின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமாக வின்ஃபாஸ்ட் தமிழ்நாட்டில் ரூ.16000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை கையெழுத்தாகிறது.

    தூத்துக்குடியில் அமையவுள்ள இந்த தொழிற்சாலையின் மூலம் தமிழ்நாட்டில் 3,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான @VinFastofficial

    தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது.

    அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் ஈவிகார் மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை வின்ஃபாஸ்ட் நிறுவனம் அமைக்கவுள்ளது.

    இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்.

    தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தாருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள்!

    #TNGIM2024-இல் இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்!

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×