என் மலர்tooltip icon

    பைக்

    கார்களை தொடர்ந்து இ ஸ்கூட்டர்கள்... அடுத்த அதிரடிக்கு ரெடியாகும் வின்ஃபாஸ்ட்..?
    X

    கார்களை தொடர்ந்து இ ஸ்கூட்டர்கள்... அடுத்த அதிரடிக்கு ரெடியாகும் வின்ஃபாஸ்ட்..?

    • இவை மணிக்கு 60-99 கிமீ வேகத்தில் இயக்கும் திறன் கொண்டவை.
    • பேட்டரி வரம்புகள் மாடலுக்கு மாடல் வேறுபடுகின்றன.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு புதுவரவு நிறுவனம் வின்ஃபாஸ்ட். சமீபத்தில் இந்தியாவில் VF 6 மற்றும் VF 7 மின்சார எஸ்.யூ.வி.க்களை அறிமுகப்படுத்திய வின்ஃபாஸ்ட், நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் மின்சார ஸ்கூட்டர் பிரிவிலும் களமிறங்க தயாராகி வருகிறது.

    2026 ஆம் ஆண்டில் தனது முதல் மின்சார ஸ்கூட்டரை இங்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. அதன் உலகளாவிய வரிசையில் இருந்து எந்த மாடல்களை உள்ளூர் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள அந்நிறுவனம் ஏற்கனவே ஆய்வு நடத்தியது.

    வின்ஃபாஸ்ட் தற்போது ஃபெலிஸ், கிளாரா நியோ, ஈவோ கிராண்ட், வெரோ எக்ஸ், வென்டோ எஸ் மற்றும் தியோன் எஸ் உள்ளிட்ட பல மின்சார ஸ்கூட்டர் மாடல்களை சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்கிறது. இந்த ஸ்கூட்டர்களில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட அல்லது ஹப்-மவுண்டட் மோட்டார்கள் உள்ளன.



    இவை மணிக்கு 60-99 கிமீ வேகத்தில் இயக்கும் திறன் கொண்டவை. பேட்டரி வரம்புகள் மாடலுக்கு மாடல் வேறுபடுகின்றன, சுமார் 160 கிமீ வரை செல்லும். இந்த விவரங்கள் வியட்நாமிய சந்தைக்கானவை. இவற்றில் சில இந்தியாவிற்காக மதிப்பீடு செய்யப்படலாம்.

    அங்கு இந்த நிறுனம் ஸ்கூட்டரின் அன்றாட பயணத்திற்கு ஏற்ற தன்மை, மாறுபட்ட சாலை நிலைமைகளை சமாளிக்கும் திறன் மற்றும் இந்தியாவின் தட்பவெப்ப நிலைகளின் கீழ் பவர்டிரெய்னின் ஆயுள் ஆகியவற்றை மதிப்பீடு செய்கிறது.

    வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் இந்திய வெளியீடு 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை புதிய மாடல்கள் 2026 பண்டிகை காலத்தை குறிவைத்து அறிமுகம் செய்யப்படலாம். இந்தப் பிரிவில் தற்போது டிவிஎஸ், ஏத்தர் எனர்ஜி, பஜாஜ் ஆட்டோவின் செட்டக் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா போன்ற பிரான்டுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

    Next Story
    ×