search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சிலைகள் கரைக்க"

    • நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கும் வழக்கம் சில ஆண்டுகளாக இருந்து வருகின்றது.
    • இதனால் நீர் வழங்களில் தடை ஏற்படுகின்றது.

    ஈரோடு:

    கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

    வழி பாட்டிற்கு பிறகு நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கும் வழக்கம் சில ஆண்டுகளாக இருந்து வருகின்றது.

    பெரும்பாலான சிலைகள் வேதிப் பொருட்களை கொண்டே செய்யப்படுகின்றது.

    கடந்த ஆண்டுகளில் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி கீழ்பவானி பாசன வாய்க்காலில் ஆங்காங்கே சிலைகளை போட்டுவிட்டு சென்று விடுகின்றனர்.

    சிலைகளில் சேர்க்கப்படும் ரசாயனம் நீரை மாசுபடுத்தி விடுகின்றது. உடைக்கப்பட்ட சிலைகளின் பாகங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டு மதகுகளில் அடைத்து விடுகி ன்றது.

    இதனால் நீர் வழங்களில் தடை ஏற்படுகின்றது. பாசன கால்வாய்களில் சிலைகளை கரைப்பதை அரசு தடை செய்ய வேண்டும்.

    மீறி கரைப் பவர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×