search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழ்பவானி வாய்க்காலில்"

    • கீழ்பவானி வாய்க்காலில் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.
    • தீயணைப்பு துறை வீரர்கள் பயிற்சியை நடத்தினர்.

    நம்பியூர்:

    நம்பியூர் வட்டம் குருமந்தூர் கிராமம் கோவை மெயின்ரோடு கீழ்பவானி வாய்க்காலில் பேரிடர் கால ஒத்திகை பயிற்சியானது நம்பியூர் தீயணைப்பு துறையினரால் நடத்தப்பட்டது.

    நம்பியூர் தாசில்தார் மாலதி முன்னிலையில், நம்பியூர் தீயணைப்புத் துறை ஆய்வாளர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் பயிற்சியை நடத்தினர்.

    இதில் நம்பியூர் துணை தாசில்தார்கள் விஜயகுமார், பரமசிவம், நில வருவாய் ஆய்வாளர் கோகிலாம்பாள், கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நாளை முதல் முறை வைத்து தண்ணீர் திறந்து விடுவதற்கான அட்டவணையை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
    • ஒரு சில விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாக்கால் பாசனத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம்15-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 3,500 ஏக்கர் நில ங்கள் பயன்பெற்று வருகி ன்றன. தண்ணீர் திறக்கப்ப ட்டு 54 நாட்கள் கடந்த நிலை யில் நாற்று நடவு மற்றும் நாற்று விடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே பவானி சாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாததால் அணைக்கான நீர் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

    அணையில் 11 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ள நிலையில் தற்போதைய தண்ணீர் இருப்பினை கொண்டு கீழ்பவானி பாசன சேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது.

    எனவே நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் தற்போது அணையில் உள்ள தண்ணீ ரின் இருப்பை வைத்து அனைத்து விவசாயிகளுக்கும் தண்ணீர் கிடைக்கின்ற வகையில் முறை வைத்து தண்ணீர் திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் முறை வைத்து தண்ணீர் திறந்து விட ஒரு சில விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதும் வேறு வழியின்றி இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் நாளை (வியாழக்கிழமை) முதல் முறை வைத்து தண்ணீர் திறந்து விடுவதற்கான அட்ட வணையை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது. மேலும் முறை வைத்து தண்ணீர் விநியோகக்க வசதியாக 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    கோபி கால்வாய் உபகோட்டம், ஊஞ்சலூர் பகிர்மான கால்வாய், சென்ன சமுத்திரம் பகிர்மான கால்வாய் என மூன்று பிரிவுகளாக பிரிக்க ப்பட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கும் வழக்கம் சில ஆண்டுகளாக இருந்து வருகின்றது.
    • இதனால் நீர் வழங்களில் தடை ஏற்படுகின்றது.

    ஈரோடு:

    கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

    வழி பாட்டிற்கு பிறகு நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கும் வழக்கம் சில ஆண்டுகளாக இருந்து வருகின்றது.

    பெரும்பாலான சிலைகள் வேதிப் பொருட்களை கொண்டே செய்யப்படுகின்றது.

    கடந்த ஆண்டுகளில் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி கீழ்பவானி பாசன வாய்க்காலில் ஆங்காங்கே சிலைகளை போட்டுவிட்டு சென்று விடுகின்றனர்.

    சிலைகளில் சேர்க்கப்படும் ரசாயனம் நீரை மாசுபடுத்தி விடுகின்றது. உடைக்கப்பட்ட சிலைகளின் பாகங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டு மதகுகளில் அடைத்து விடுகி ன்றது.

    இதனால் நீர் வழங்களில் தடை ஏற்படுகின்றது. பாசன கால்வாய்களில் சிலைகளை கரைப்பதை அரசு தடை செய்ய வேண்டும்.

    மீறி கரைப் பவர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அணைக்கு வினாடிக்கு 378 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
    • கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக கடந்த 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் முடிவடையாததால் சிறிது நேரத்தில் தண்ணீர் மீண்டும் நிறுத்தப்பட்டது.

    பின்னர் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து கடந்த 19-ந் தேதி முதல் மீண்டும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    முதலில் 200 கனஅடி திறக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 1,250 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டு ள்ளது. 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையில் தற்போதைய நீர் இருப்பு 81.84 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 378 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 250 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,350 கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    அணையின் நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    • வாக்கால் தண்ணீரில் இறங்கி சிவக்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
    • தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அவரது உடலை மீட்டனர்.

     சத்தியமங்கலம்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வாகராயாம் பாளையம் பப்பம்பட்டியை சேர்ந்த வர்கள் ராக்கிமுத்து (வயது 45), சிவக்குமார் (35), ராஜேந்திரன் (35). இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    இவர்கள் 3 பேரும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள எரங்காட்டூரில் உள்ள கீழ்பவானி வாய்க்கா லுக்கு வந்தனர்.

    இதையடுத்து ராக்கி முத்து, சிவக்குமார் ஆகி யோர் வாய்க்காலில் இறங்கி குளித்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அவர்கள் 2 பேரும் எதிர்பாராத விதமாக வாய்க்காலில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர்.

    இதை கண்ட கரையில் இருந்த ராஜேந்திரன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவர்களை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் வாய்க்காலில் மூழ்கிய 2 பேரை மீட்க முடியவில்லை.

    இது குறித்து சத்திய மங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வாய்க்காலில் இறங்கி தண்ணீரில் மூழ்கியவர்களை தேடினர். அப்போது அவர்கள் மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ராக்கிமுத்துவை பிணமாக மீட்டனர்.

    ஆனால் சிவக்குமார் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரை தீயணை ப்பு வீரர்கள் தீவிர மாக தேடி வந்தனர். இதை தொடர்ந்து நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் ஏரங்காட்டூர் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி சிவக்குமாரை 2-வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று இரவு வரை சிவக்குமார் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை 3-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் கீழ்பவானி வாக்கால் தண்ணீரில் இறங்கி சிவக்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ெதாடர்ந்து தீயணைப்பு வீரர்கள் இன்று காலை வாய்க்கால் புதூர் கீழ்பவானி வாய்க்காலில் தேடி கொண்டு இருந்தனர்.

    அப்போது அவர்கள் குளித்த இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பவானிசாகர் அடுத்த வாய்க்கால் புதூர் ஒற்றை பாலம் என்ற பகுதியில் சிவக்குமார் உடல் பிணமாக கரை ஒதுங்கி கிடந்தது.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அவரது உடலை மீட்டனர். இதையடுத்து சிவகுமார் உடல் ஆம்புலன்சு மூலம் சத்திய மங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 2 பேரும் வாய்க்காலில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர்.
    • தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடினர்.

    சத்தியமங்கலம்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வாகராயாம் பாளையம் பப்பம்பட்டியை சேர்ந்தவர்கள் ராக்கிமுத்து (வயது 45), சிவக்குமார் (35), ராஜேந்திரன் (35).

    நண்பர்களான இவர்கள் 3 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தில் தொழிலா ளர்களாக பணியாற்றி வந்தனர்.

    இவர்கள் 3 பேரும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள எரங்காட்டூருக்கு வந்தனர். இதைதொடர்ந்து அங்குள்ள கீழ்பவானி வாய்க்காலில் ராக்கிமுத்து, சிவக்குமார் ஆகியோர் குளிப்பதற்காக இறங்கினர்.

    அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அவர்கள் 2 பேரும் வாய்க்காலில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கரையில் இருந்த ராஜேந்திரன் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். ஆனால் அவர்களால் வாய்க்காலில் மூழ்கிய 2 பேரை மீட்க முடியவில்லை.

    இது குறித்து சத்திய மங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசிங் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வாய்க்காலில் இறங்கி தண்ணீரில் மூழ்கியவர்களை தேடினர். இதில் அவர்கள் மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ராக்கிமுத்து உடலை பிணமாக மீட்டனர்.

    ஆனால் சிவக்குமார் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடினர்.

    இதற்கிடையே இரவு 8 மணி ஆனதால் மிகவும் இருட்டாக காணப்பட்டது. இதனால் அவரை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அவரை தேடும் பணியை நிறுத்தினர்.

    இந்த நிலையில் இன்று காலை எரங்காட்டூர் பகுதிக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீண்டும் வந்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி சிவகுமாரை 2-வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுட்டு வருகின்றனர்.

    இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் என ஏராளமான பொதுமக்கள் 2-வது நாளாக திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான நிலை உருவானது.

    • கீழ்பவானி வாய்க்கால் மதகு அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல்கரை ஒதுங்கி இருந்தது.
    • இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே அய்யம்பாளையம்  ஒரத்துப்பாளையம் சாலையில் சோளியம்மன் கோவில் அருகே கீழ்பவானி வாய்க்கால் மதகு அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல்கரை ஒதுங்கி இருந்தது.

    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு சென்ற சென்னிமலை போலீசார் மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் இறந்த மூதாட்டி திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா பாறவலசு பகுதியை சேர்ந்த சுப்பராயன் மனைவி சுந்தரி (64) என்பதும், தற்போது சென்னிமலை அருகே உள்ள நல்லப்பாளி பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது.

    இதனையடுத்து அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • வாய்க்கா லில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த 4 பேரையும் மீட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    கோபி:

    பவானிசாகர் அணை யின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது.

    இதையடுத்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் திறந்து விட ப்பட்டது. வரத்து குறைந்த தால் ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரு கிறது. இந்த தண்ணீர் மூலம் சுமார் 2 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்த தண்ணீர் டிசம்பர் மாதம் வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. மேலும் வாய்க்கால் கரைகளை தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    இந்த நிலையில் வாய்க்கா லில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 பேர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    இது குறித்த விபரம் வருமாறு:-

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நல்லூரை சேர்ந்த மளிகை கடை உரி மையாளர் குடும்ப தகராறு காரணமாக கீழ்பவானி வாய்க்காலில் தனது 2 மகன்களுடன் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதே போல் நேற்று ஒரு பெண் 2 மகள்களை வாய்க்காலில் தள்ளி விட்டு தற்கொலை செய்து கொண்டார். கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கரட்டு பாளையத்தை சேர்ந்தவர் தீபக் (45). இவரது மனைவி விஜய லட்சுமி (40). இவர்களுடை மகள்கள் மதுநிஷா (12), தருணிகா (6).

    கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதே போல் நேற்று முன்தினமும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் விஜய லட்சுமி தனது 2 மகள்களை மொபட்டில் அழைத்து கொண்டு குருமந்தூர் அருகே சுட்டிக்கல் மேடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் ஸ்கூட்ட ரை நிறுத்தி விட்டு தனது 2 மகளுடன் வாய்க்காலில் குதித்தார்.

    இதில் வேட்டைகாரன் கோவில் பகுதியில் உள்ள வாய்க்காலில் விஜயலட்சுமி பிணமாக மீட்கபப்ட்டார். அவரது மூத்த மகள் மது நிஷா ஆயிபாளையம் பகுதியில் ஒரு மரக்கிளையில் தொங்கி யபடி அழுது கொண்டு இருந்தார். அவரை உயிரு டன் மீட்டனர். ஆனால் அவரின் மற்றொரு மகள் தருணிகா வை கண்டு பிடிக்க முடி யவில்லை. அவரை தொடர்ந்து தேடி வருகிறார் கள்.

    இந்த நிலையில் நேற்று கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சுண்டக்க ம்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண் தனது மகள் மற்றும் 2 மகன்களுடன் நம்பியூர் அருகே கூடக்கரை வாய்க்கால் பகுதிக்கு வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் 4 பேர் குடும்ப தகராறு காரணமாக வாய்க்கால் கரையோரம் தற்கொலை செய்வதற்காக நின்று கொண்டு இருந்தனர்.

    இதை கண்ட அந்த பகுதி யை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் ஈரோடு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடு த்தனர். இதையடுத்து அவர்கள் கடத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த 4 பேரையும் மீட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பொதுமக்கள் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். இது போன்ற விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம் என போலீசாரும் அதிகாரிகளும் கேட்டு கொண்டு உள்ளனர்.

    வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்யும் சம்பவங்களை தடுக்க அதிகாரிகள் அந்த பகுதிகளில் தடுப்பு அமைத்து கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.

    ×