கீழ்பவானி வாய்க்காலில் மிதந்து வந்த மூதாட்டியின் உடல்

கீழ்பவானி வாய்க்கால் மதகு அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல்கரை ஒதுங்கி இருந்தது.இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
கீழ்பவானி வாய்க்காலில் மிதந்து வந்த மூதாட்டியின் உடல்
Published on

சென்னிமலை:

சென்னிமலை அருகே அய்யம்பாளையம்  ஒரத்துப்பாளையம் சாலையில் சோளியம்மன் கோவில் அருகே கீழ்பவானி வாய்க்கால் மதகு அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல்கரை ஒதுங்கி இருந்தது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு சென்ற சென்னிமலை போலீசார் மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்த மூதாட்டி திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா பாறவலசு பகுதியை சேர்ந்த சுப்பராயன் மனைவி சுந்தரி (64) என்பதும், தற்போது சென்னிமலை அருகே உள்ள நல்லப்பாளி பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com