search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Body recovery of"

    • வாக்கால் தண்ணீரில் இறங்கி சிவக்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
    • தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அவரது உடலை மீட்டனர்.

     சத்தியமங்கலம்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வாகராயாம் பாளையம் பப்பம்பட்டியை சேர்ந்த வர்கள் ராக்கிமுத்து (வயது 45), சிவக்குமார் (35), ராஜேந்திரன் (35). இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    இவர்கள் 3 பேரும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள எரங்காட்டூரில் உள்ள கீழ்பவானி வாய்க்கா லுக்கு வந்தனர்.

    இதையடுத்து ராக்கி முத்து, சிவக்குமார் ஆகி யோர் வாய்க்காலில் இறங்கி குளித்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அவர்கள் 2 பேரும் எதிர்பாராத விதமாக வாய்க்காலில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர்.

    இதை கண்ட கரையில் இருந்த ராஜேந்திரன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவர்களை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் வாய்க்காலில் மூழ்கிய 2 பேரை மீட்க முடியவில்லை.

    இது குறித்து சத்திய மங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வாய்க்காலில் இறங்கி தண்ணீரில் மூழ்கியவர்களை தேடினர். அப்போது அவர்கள் மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ராக்கிமுத்துவை பிணமாக மீட்டனர்.

    ஆனால் சிவக்குமார் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரை தீயணை ப்பு வீரர்கள் தீவிர மாக தேடி வந்தனர். இதை தொடர்ந்து நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் ஏரங்காட்டூர் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி சிவக்குமாரை 2-வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று இரவு வரை சிவக்குமார் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை 3-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் கீழ்பவானி வாக்கால் தண்ணீரில் இறங்கி சிவக்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ெதாடர்ந்து தீயணைப்பு வீரர்கள் இன்று காலை வாய்க்கால் புதூர் கீழ்பவானி வாய்க்காலில் தேடி கொண்டு இருந்தனர்.

    அப்போது அவர்கள் குளித்த இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பவானிசாகர் அடுத்த வாய்க்கால் புதூர் ஒற்றை பாலம் என்ற பகுதியில் சிவக்குமார் உடல் பிணமாக கரை ஒதுங்கி கிடந்தது.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அவரது உடலை மீட்டனர். இதையடுத்து சிவகுமார் உடல் ஆம்புலன்சு மூலம் சத்திய மங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சாக்கடை கால்வாயில் பெண் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்பாக உள்ள சாக்கடை கால்வாயில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் உடல் நிர்வாண நிலையில் கிடப்பதாக சத்தியமங்கலம் டவுன் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகருக்கு தகவல் கிடைத்தது.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் புகார் செய்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 8 அடி ஆழ சாக்கடையில் அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    நிர்வாண நிலையில் உடல் கிடந்ததாலும், அருகிலேயே பச்சை கலரில் சேலை கிடந்துள்ளதாலும் அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா? அல்லது தவறி சாக்கடையில் விழுந்தாரா? என்பது குறித்தும் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×