search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய விநாயகர்"

    • இத்தலத்தில் சிவராத்திரி மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது.
    • நந்தி பெருமானுக்கு ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.

    இந்த சன்னதி ஆலயத்தின் தென் மேற்கு மூலையில் அமைந்துள்ளது.

    ஆவணி மாதம் வளர்பிறை நாளில் வரும் சதுர்த்தி திருநாளில் இவ்விஜய விநாயகருக்கு காலை அபிஷேகம்,

    சந்தன காப்பு மாலை, ஸ்ரீமூஷிக வாகனத்தில் சுவாமி வீதி புறப்பாடும்,  நடைபெற்று வருகிறது.

    பவுர்ணமிக்கு அடுத்த ஐந்தாவது நாள் தேய்பிறையில் வரும் சங்கடஹரசதுர்த்தி அன்று மாலை அபிஷேகமும்,

    தூப தீப ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெற்று, சுவாமி உற்சவ மூர்த்தி திருக்கோவிலை வலம் வருவார்.

    இத்திருக்கோவிலின் மூலவரான அருள்மிகு அருணாச்சலேசுவரருக்கு, ஒவ்வொரு பிரதோஷ காலத்திலும்,

    விசேஷ அபிஷேகமும் நந்தி பெருமானுக்கு ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.

    இத்திருக்கோவிலில் பிரதோஷ வேளையில் நெய் விளக்கேற்றி வெல்லம் கலந்த அரிசியை நந்தி பெருமானுக்கு நிவேதிக்கிறார்கள்.

    அருகம்புல் ஆராதனையும், வில்வதளத்தில் அர்ச்சனையும் அலங்காரமும் வெகு விமரிசையாக பிரதோஷ காலத்தில் பக்த கோடிகளால் நடைபெறும்.

    இத்திருக்கோவிலில் பிரதோஷ காலத்தில் பிரதோஷ நாயனார் ரிஷப வாகனத்தில்,

    குடை மற்றும் வெண்சாமரங்களுடன், தேவாரம் மற்றும் மங்கல பண் இன்னிசையோடு திருக்கோவிலினை பக்தர்கள் சூழ, பவனி வருவர்.

    பக்த கோடிகள் பவுர்ணமியில் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்ய இயலாதோர்,

    இந்த அருணாசலேசுவரரை தரிசித்து வேண்டும் வரத்தினையும் வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுவதாக நம்புகின்றனர்.

    இத்தலத்தில் சிவராத்திரி மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது.

    இரவு நான்கு கால பூஜைகளும் வில்வ தளத்தால் அர்ச்சிக்கப்பட்டு அனைத்து வித அபிஷேகங்களும், நடைபெற்று

    ஒவ்வொரு காலத்திற்கும் வெவ்வேறு வஸ்திரங்களுடன் ஈசன் காட்சி அளித்து அருள்பாளித்து வருகிறார்.

    ×