search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாஷிங்மெஷின்"

    • வீடியோ 70 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
    • பயனர்கள் பலரும் சாய் திருமலாநீதியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    உலகின் மிகச்சிறிய வாஷிங்மெஷினை உருவாக்கி ஆந்திராவை சேர்ந்த சாய் திருமலாநீதி என்பவர் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், சாய் திருமலாநீதி ஒரு சிறிய வாஷிங்மெஷினை உருவாக்கும் செயல்முறை காட்சிகள் உள்ளது. மிகவும் நுணுக்கமான கவனிப்புடன், சுவிட்ச் மற்றும் ஒரு சிறிய பைப் உள்ளிட்ட சிறிய பாகங்களை பயன்படுத்தி அவர் வாஷிங்மெஷினை ஒருங்கிணைக்கிறார். அது முழுமையாக செயல்பட தொடங்குகிறது.

    பின்னர் அதில் தண்ணீர் ஊற்றுகிறார். அதன்பிறகு ஒரு சிறிய துணியை போட்டு சலவை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சிறிது நேரத்தில் அந்த துணியை வெளியே எடுத்தபோது அது சுத்தமாக காட்சி அளிக்கிறது. இணையத்தில் வைரலான இந்த வீடியோ 70 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் சாய் திருமலாநீதியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • வேலையை சுலபமாக்கக்கூடியது என்பதால் பெண்களிடையே இதற்கு மவுசு அதிகம்.
    • அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது.

    வாஷிங்மெஷின் தற்போது அனைத்து வீடுகளிலும் இருக்கக் கூடிய அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறி விட்டது. நேரத்தை மிச்சப்படுத்தி, வேலையை சுலபமாக்கக்கூடியதாக இருப்பதால் பெண்களிடையே இதற்கு மவுசு அதிகம். அதேசமயம் உங்களுடைய தேவைகளுக்கு ஏற்ற சலவை எந்திரத்தை தேர்ந்தெடுத்து வாங்குவதில் கவனமுடன் இருக்க வேண்டும்.

    தானியங்கி முறையில் செயல்படும் ஆட்டோமேட்டிக் வாஷிங்மெஷினுடன் ஒப்பிடும்போது, செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் பல வகைகளில் பயன்தரக்கூடியது. இதை பயன்படுத்துவதால் மின்சாரத்தையும், தண்ணீரையும் மிச்சப்படுத்த முடியும். செமி ஆட்டோமேட்டிக் வாஷிங்மெஷின் வாங்கும் போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

    குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும், ஒரு நாளில் துவைக்கப்படும் துணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தும் வாஷிங்மெஷினின் கொள்ளளவைத் தேர்வு செய்ய வேண்டும். 3 நபர்கள் கொண்ட குடும்பத்துக்கு 6 முதல் 6.5கிலோ கொள்ளளவு கொண்ட வாஷிங்மெஷினும், 4 முதல் 6 நபர்கள் கொண்ட குடும்பத்துக்கு 7 கிலோ கொள்ளளவு கொண்ட மெஷினும் வாங்கலாம். 7-க்கு மேற்பட்ட நபர்கள் கொண்ட குடும்பத்துக்கு 10 கிலோ கொள்ளளவு கொண்ட வாஷிங்மெஷினும் ஏற்றதாக இருக்கும்.

    சலவை செய்யும்போது மெஷினுக்குள் துணிகள் நன்றாக சுழலக்கூடிய அளவுக்கு இடவசதி இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக டிரம்மில் துணிகளை திணித்தால் அவற்றில் உள்ள அழுக்கு போகாது. அதோடு நாளடைவில் சலவை எந்திரமும் பழுதாகக் கூடும்.

    வாஷிங்மெஷினுக்குள் துணிகளை போடுவதற்கு முன்பு, பாக்கெட்டுகளில் வைத்திருக்கும் காகிதங்கள், பணம். நாணயங்கள் போன்ற அனைத்து பொருட்களையும் கவனமாக வெளியே எடுத்து விட வேண்டும். இவை தண்ணீர் வெளியே செல்லும் குழாயில் அடைப்பை ஏற்படுத்துவதோடு. மெஷினில் உள்ள சிறிய பாகங்களை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளது.

    சலவை செய்யும்போது வாஷிங்மெஷினுக்குள் அதிக கனமான ஜீன்ஸ் பேண்ட் போன்ற துணிகளை முதலில் போட வேண்டும். பிறகு லேசான துணிகளை அவற்றின் மேலே போட வேண்டும். அப்போதுதான் எல்லா துணிகளும் சுத்தமாக துவைக்கப்படும்.

    தண்ணீரை பிழிவதற்கான டிரையர் பகுதியில் துணிகளை போட்டதும் பாதுகாப்பு மூடியை பொருத்த வேண்டியது அவசியமானது. இல்லையெனில் அதிகப்படியான அதிர்வால் டிரையர் டிரம் பழுதாகும்.

    டாப் லோடிங் மெஷின்களை காட்டிலும் ஃபிரண்ட் லோடிங் மெஷின்களை உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், டாப் லோடிங் மெஷின்களில் தண்ணீர் தாமாகவே கீழ் இறங்கி விடும் என்பதால், அதிக பராமரிப்பு தேவையில்லை.

    ×